சனி, 9 ஜூலை, 2011

நில அபகரிப்பு: முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ தலைமறைவு

ரூ.40 லட்சம் நிலத்தை மிரட்டி வாங்கியதாக புகார்: முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவானந்தம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் தன் மகன்களுடன் தலைமறைவானார்.

ஆரணியில் உள்ள துளசிராமன் பாகவதர் என்பவரின் நிலத்தை மிரட்டி வாங்கியதாக தி.மு.க. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சிவானந்தம் மிரட்டி வாங்கியதாக நிலத்துக்குச் சொந்தக்காரரான துளசிராமன் பாகவதர் திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5,800 சதுர அடி நிலத்தை ரூ.11 லட்சத்திற்கு தனது மகன் லோகேஸ்க் பெயருக்கு எழுதித் தரவேண்டும் என்று மிரட்டியதாகவும் தான் லோகேஷ் பெயரில் பத்திரத்தை எழுதிக் கொடுத்த பிறகு 11 லட்சம் கேட்டும் பணம் கொடுக்க மறுத்து தான் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் துளசி ராமன் பாகவதர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு ரூ.4 லட்சம் தொகை கொடுத்தா அதற்கு மேல் அவர் பணம் எதுவும் தரவில்லை. இதனால் லோகேஷ் மீது செய்த பதிவுப்பத்திரத்தை ரத்து செய்ய முயற்சிகள் மெற்கொண்டுள்ளார் துளசிராமன் பாகவதர். அப்போதும் தான் சிவானந்தத்தினால் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே லோகேஷ் பெயரில் இருந்த பவர் பத்திரம் அவரது தம்பி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனுவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் சிவானந்தமும் அவரது மகன்களும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/09/1110709027_1.htm

கருத்துகள் இல்லை: