ஞாயிறு, 24 ஜூலை, 2011

தமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது

சிறீலங்கா படையினரதும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய விடுதலையை அற்ப சலுகைகளுக்காக விட்டுக் கொடுக்க தயாரில்லை என்பதை மக்கள் ஜனநாயக முறைப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 4,307 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1,232 வாக்குகள் – 02 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சி 28 வாக்குகளை பெற்றுள்ளது.

0000
பருத்தித்துறை நகரசபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 3263 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1107 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 115 வாக்குகளையும் சுயேட்சைக்குழு 7 வாக்குகளையும் பெற்றுள்ளன.

00000
யாழ்மாவட்டத்திலுள்ள வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 2416 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு 653 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

000
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 10107 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2238 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 105 வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை..

0000

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 12,065 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4919 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 78 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

0000
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 11,954 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,428 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 216 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.
0000

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6865 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

0000
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 4284 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் 2364 வாக்குகளைப் பெற்று1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1134 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 152 வாக்குகளையும் மாத்திரம் பெற்றுள்ளன
0000

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசபையும் இலங்கை தமிழரசுக்கட்சி வசமாகியுள்ளது
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி – 2,198 வாக்குகளை பெற்று– 07 ஆசனங்களையும்
பிரஜைகள் முன்னணி – 847 வாக்குகளை பெற்று– 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன
ஐக்கிய தேசியக் கட்சிக்கு - 21 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன
0000


திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையும் இலங்கை தமிழரசுக்கட்சி வசமாகியுள்ளது
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி – 8986 வாக்குகளை பெற்று– 05 ஆசனங்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6353 வாக்குகளை பெற்று– 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன
ஐக்கிய தேசியக் கட்சி – 2869 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது
0000
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி 1637 வாக்குகளை பெற்று --- ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1158 வாக்குகளை பெற்று ------ ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன
கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி
19500 வாக்குகளை பெற்று --- ஆசனங்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5050 வாக்குகளைபெற்று ----ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன

பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி
3818 வாக்குகளை பெற்று ---ஆசனங்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3517 வாக்குகளை பெற்று ---ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன
0000
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.


0000

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசசபைக்கான தேர்தலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8,451 வாக்குகளை பெற்று – 06ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி – 2,961 வாக்குகளை பெற்று – 02 ஆசனங்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி - 1,639 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன
0000
திருகோணமலை மாவட்டம் – கந்தளாய் பிரதேசசபைக்கான தேர்தலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14,270 வாக்குகளைப்பெற்று – 08 ஆசனங்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,820 வாக்குகள் – 03ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

கருத்துகள் இல்லை: