திங்கள், 18 ஜூலை, 2011

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: அதிமுகவினர் பரபரப்பு

சென்னை: சென்னையில் நடக்கும் அதிமுக கூட்டங்களில் குண்டு வெடிக்கும் என்று பெண் ஒருத்தி போனில் மிரட்டல் விடுத்துள்ளாள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக கட்சித் தலைமையகத்திற்கு நேற்று மாலை 4 மணிக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய பெண் இன்று (நேற்று) சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து

ராயப்பேட்டை உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உள்ளிட்ட போலீசார் அதிமுக கட்சி தலைமை அலுவகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள தொலைபேசியில் பொருத்தப்பட்டிருந்த காலர் ஐடியில் பதிவான எண்களைப் பார்த்தபோது அந்த பெண் ஒரு செல்போனில் இருந்து பேசியது தெரிய வந்தது.

அந்த செல்போன் அழைப்பு திண்டுக்கல்லில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பெண்ணைப் பிடிக்குமாறு திண்டுக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் அதிமுக சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/18/bomb-hoax-call-scared-admk-men-aid0128.html

கருத்துகள் இல்லை: