வெள்ளி, 29 ஜூலை, 2011

இங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண் வழக்கு

லண்டன்: இங்கிலாந்து அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற உரிமை ‌ சட்டத்தை எதிர்த்து, இந்திய பெண் ஒருவர் லண்டன் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்தில் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்ற புதிய சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தால் பாதிப்புக்குள்ளான ரஷிதா சப்தி என்ற இந்திய பெண் ஒருவர் லண்டனில் உள்ள பிர்மிங்ஹாம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் (ரஷிதா சப்தி (54) எனது கணவனர் வாலிசப்தி (58) யும் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷெயர்ஸ் நகருக்கும் அடிக்கடி சென்று வருகிறேன், எனது கணவர் இந்தியாவில் வசிக்கிறார். அவருக்கு கணவருக்கு ஆங்கிலம் ‌எழுத படிக்க தெரியாத காரணத்தால் அவருக்கு இங்கிலாந்தில் புதிய குடியேற்ற சட்டத்தின் படி குடியேற்ற உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் எங்களுக்குள்ள உரிமையினை பறிப்பதற்கு சமமாகும், மனித உரிமையை மீறி செயல் . ஆகவே இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளித்த எனது கணவரை என்னுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்றார். மனுதாரர் சார்பில் மன்ஜித்கில் ஆஜராகி வாதாடினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=284778

கருத்துகள் இல்லை: