வியாழன், 21 ஜூலை, 2011

பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு.க.ஸ்டாலின்

பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது' என்று க‌ட்‌சி‌யி‌ன் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூ‌‌றினா‌ர்.

காஞ்‌சிபுரம் மாவட்ட‌ம் மறைமலை நகரில் நே‌‌ற்‌றிரவு நட‌ந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்ட‌த்‌தி‌ல் பே‌சிய அவ‌ர், ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தாலும், பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அவர்களுக்கு, கல்வியை சமமாக வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சமச்சீர் கல்வி திட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார் எ‌ன்றா‌ர்.

ஆனா‌ல் த‌ற்போது அ.இ.அ.‌தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌ல் மாணவர்களுக்குப் சம‌ச்‌‌சீ‌ர் பாடப்புத்தகங்களே கிடைக்கக்கூடாது என நினை‌த்து மே‌ல்முறை‌யீடு செ‌ய்து‌ள்ளது எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினார்.

''தற்போது தி.மு.க. மீது வழக்குகளை போட்டு தி.மு.க.வை அழிக்க ஒழிக்க திட்டமிடுகிறார்கள். அப்படி அழிக்க ஒழிக்க நினைத்தவர்கள் தான் ஒழிந்துபோயிருக்கிறார்களே தவிர இந்த இயக்கம் அழிந்துவிடவில்லை'' எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்காது, காலம் மாறும் எ‌ன்று கூ‌றிய ‌‌ஸ்டா‌லி‌ன், பொய் வழக்கு போடும் அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம், அப்போது அந்த அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எ‌ன்றா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/21/1110721010_1.htm

கருத்துகள் இல்லை: