சனி, 9 ஜூலை, 2011

இன்றைய முக்கிய செய்திகள்

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள தென் சூடான் இன்று புதிய சுதந்திர நாடாக உதயமாகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விடுதலைப்போராட்டத்தின் பின்னர் தென் சூடானிய மக்கள் இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறார்கள்
15இலட்சத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்ட 20 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் ஜோர்ஜ் புஷ், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை; அமைச்சர் கொலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், சூடான் அரசுக்கும் தென் சூடான் மக்களின் விடுதலைக்காகப் போராடிய சூடானிய மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி உடன்பாடு காணப்பட்டது
இந்த உடன்பாட்டின் படி தென் சூடானிய மக்கள் தாங்கள் சூடானில் இருந்து பிரிந்து போவதற்கு விருப்புகிறார்களா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.; இந்த வாக்கெடுப்பில் தென் சூடானிய மக்கள் தாங்கள் சூடானில் இருந்து பிரிந்து போவதற்கு விரும்பம் தெரிவித்ததையடுத்து,
புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் இன்று பதிய நாடாக உதயமாகிறது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
நாடு; கடந்த தமிழீழ அரசாங்கத்தை இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு சூடானிய மக்கள் விடுதலை முன்னணி விடுத்த சிறப்புஅழைப்பை ஏற்று மூன்று சிறப்பு பிரதிநிதிகள் இந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர விழாவில் கலந்து கொள்கின்றனர்
0000
இன்று உலகின் 193 வது நாடாக உதயமாகும் புதிய தென் சூடான் அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்திக் குறிப்பில் கடந்த 5 தசாப்தங்களாக கொடூரமான இனஒடுக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளான தென் சூடான் மக்கள் அதற்கு எதிராக நடத்திய வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் பயனாக இன்று விடுதலைக்காற்றை சுவாசிக்கும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அவர்களைப் போல அடக்குமறையின் வலிiயும் இனப்படுகொலையின் வேதனையையும் அனுபவித்த ஈழத்தமிழ் மக்கள் தென் சூடானிய மக்களின் வெற்றியை தங்களது வெற்றியாக கருதிப் பெருமிதம் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
சிறிலங்கா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை என்றும் அது உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது என்றும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து வெளியிடப்பட்டது கூட்டறிக்கையே என்றும் இது உடன்பாடு அல்ல என்றும் சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு உதவவே இந்தியா விரும்புகிறது என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியான ஒரு தீர்வையே காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என சிலர் எண்ணலாம என்றும்; குறிப்பிட்ட அவர்
உண்மையில் இது காலத்தை இழுத்தடிக்கும் வேலையல்ல என்றும் தீர்வை மிக விரைவாக பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்
சூடானுடன் சிறிலங்காவைச் சிலர் ஒப்பிட முற்படுகின்றனர் என்றும் ஆனால் சூடானுடன் சிறிலங்காவை ஒப்பிட முடியாது என்றும் நாடு கடந்த அரசு பற்றி பலர் அச்சம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பீரிஸ் அதை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்றும் கூறினார்
00
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் நேற்று இரவு கொழும்பு சென்றடைந்தார். அவர் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பக்கு சென்றுள்ள லியம் பொக்ஸ், சிறீலங்காவின் அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
000
யாழ் குடாநாட்டிலுள்ள சிறீலங்கா .படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பை தீயசக்தி என்று விமர்சித்துள்ளார்.

கொழும்பு அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தீயசக்திகள் என்று வர்ணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாகவும், இயல்பு நிலை உருவாகவில்லை என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே மேஜர் ஜெனரல் மகிநத ஹத்துருசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் இது போன்ற பரப்புரைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தீயசக்திகள் ஈடுபடுவது வழக்கமே என்றும் அரசியல் நலன் கருதியே அவர்கள் இத்தகைய பரப்புரைகளில் ஈடுபடுவதாகவும் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார்.
00000
விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்ட கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரக முதல்நிலைச் செயலர் ஜகோ பிரென்ட்ஸ், கொழும்பு வந்த டச்சு அதிகாரிகள் விசாரணைகளை முடித்துக் கொண்டு கடந்தவாரம் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் சிறிலங்காவில் நடத்தப்பட்ட விசாரணைகள் பற்றிய அறிக்கையை டச்சு நீதிமன்றத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சமர்ப்பிக்கவுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
00000
இந்திய மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கருணாநிதியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் பொழுது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறனுக்கு பதில் வேறு ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு பிரணாப் முகர்ஜி கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தன்னுடைய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன். ராஜினாமா செய்ததை அடுத்து பல நாட்களாக எதிர்பார்க்கப்படும் மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இதே இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், திமுக இரண்டு மத்திய அமைச்சர்களை இழந்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையும், திமுக பரிந்துரைக்கும் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர காங்கிரஸ் கட்சி முன் வந்துள்ளது.
திமுக டிஆர் பாலுவை அமைச்சராக்க விரும்பினாலும், மன்மோகன் சிங் டிஆர் பாலுவை அமைச்சராக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திமுக அமைச்சர் பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
0000
இந்தியாவின் முன்னாளர் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நேற்று சென்னையில் முன்னாள் முதல் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தயாநிதி மாறன் இந்த விவகாரம் குறித்து கருணாநிதியிடம் விளக்கினார்.இந்தச் சந்திப்பின்போது டி.ஆர்.பாலு உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு கருத்துக் கூற தயாநிதி மறுத்து விட்டார். இந்த சந்திப்பில், தயாநிதிக்கு மாற்றாக புதிய அமைச்சர் ஒருவரை நியமிப்பது குறித்து விவாதிக்கவில்லை என்றும், டில்லி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
000
ஏர்செல்- மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 வாரங்களுக்குள் அவர்களை விசாரணைக்கு அழைத்து அவர்கள் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் முதலில் விசாரணை நடத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நிறுவனமான மேக்ஸிஸýக்கு விற்குமாறு அந் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரனை நிர்பந்தித்தது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. சன் குழுமத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.750 கோடி முதலீடு செய்திருப்பது குறித்து கலாநிதி மாறனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாறன் சகோதரர்களுக்கு எதிராக சிபிஐ அதிகாரிகளிடம் சிவசங்கரன் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
000

00000
கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 72 பேர் பலியாயினர். கொங்கோவின் கின்சாகா மற்றும் கிசான்கனி நகருக்கு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ஹேவா போரா என்ற பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது
127 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் இந்த விமானம் கிசான்கனி அருகே சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமா விபத்திற்குள்ளானது .இதில் 72பேர் வரை பலியாகியதாகவும் 51 பேர் வரை உயிர்தப்பியதாகவும் கொங்கோ விமான போக்குவரத்து நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். விமான போக்குவரத்தில் மோசமாக பராமரிப்பு கொண்ட நாடு என்ற பெயரை கொங்கோ பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0000

கருத்துகள் இல்லை: