திங்கள், 4 ஜூலை, 2011

தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கக்கோன் சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராகிறார்

ஏராளமான தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைப் பிரிவை வடக்கு கிழக்கில் வழிநடத்திய நிகால் இலங்கக்கோன் சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பதவியேற்கவுள்ளார்.

சிறிலங்காவின் 33வது காவல்துறை மா அதிபராக இன்று பதவியேற்கவுள்ள இலங்கக்கோன் 1982ம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையில் ஒரு உதவி அத்தியட்சகராக சேர்ந்து கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலை கோரிய ஆயுதப் போராட்டத்தை முறியடிக்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1983ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியிருந்தார்.

சிறப்பு அதிரடிப்படையில் முதலாவதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட அணியில் இலங்கக்கோனும் இடம்பெற்றிருந்தார்.

இவர் 1983ம் ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணம், அம்பாறை ,மட்டக்களப்பு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையின் பிராந்தியத் தளபதி மற்றும் இணைப்பதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையின் முதலாவது பிரதித் தளபதியாகவும் இலங்கக்கோன் பணியாற்றியுள்ளார்.

இவரது தலைமையின் கீழ் வடக்கு கிழக்கில் சிறப்பு அதிரடிப்படை செயற்பட்ட போது பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: