செவ்வாய், 19 ஜூலை, 2011

மனைவியின் ரத்தத்தைக் குடித்த பயங்கரக் கணவன்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ மாவட்டத்தின் ஷிகார்புரா கிராமத்தில் வசித்து வரும் தீபா என்ற 22 வயதுப் பெண் 3 ஆண்டுகளாகத் தன் ரத்தத்தை தினசரி குடித்து வந்ததாகத் தன் கணவர் மகேஷ் ஆஹிர்வார் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது மனைவியின் ரத்தத்தைக் குடித்தால் தனது சக்தி அதிகரிக்கும் என்பது கணவர் மகேஷ் ஆஹிர்வாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாம்!

2007ஆம் ஆண்டு தீபாவுக்கும், மகேஷ் ஆஹிர்வாருக்கும் திருமணம் நடைபெற்றது. மகேஷ் ஆஹிர்வார் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆகி சிலமாதங்களில் கணவர் மகேஷிடம் இது போன்ற விசித்திர ஆசை ஏற்பட்டது என்றும் தனது கையிலிருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி அதனை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி குடித்து வருகிறார் என்றும் தீபா புகார் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் கொடுமை என்னவெனில் தீபா கருத்தரித்திருந்தபோதும் ரத்தம் குடிப்பதை மகேஷ் நிறுத்தவில்லை.

பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்த தீபா குழந்தை பிறந்தவுடன் மகேஷ் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து ரத்தத்தை கணவன் உறிஞ்சுவதால் தீபாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை வெளியே தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்று மிரட்டியுள்ளார். மேலும் பல முறை தீபா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது கணவர் மகேஷ், தீபாவை சித்தரவதை செய்துள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தீபா தாந்து தந்தையிடம் இதனைக்கூற அவர் நேராக தீபாவை அழைத்துக் கொண்டு படேரா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் அது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்று காவலர்கள் நிராகரித்தனர்.

அதன் பிறகு ஹிந்தோரியா காவல்நிலையத்தில் தற்பொது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கணவன் மகேஷ் தலைமறைவாகியுள்ளதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1107/18/1110718032_1.htm

கருத்துகள் இல்லை: