சனி, 23 ஜூலை, 2011

தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!

கோவை: திமுகவின் அதி முக்கிய செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கோவையில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்துக்கு வருவாரோ மாட்டாரோ என்று பலரும் சந்தேகம் கிளப்பிய மத்திய அமைச்சர் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், முன்னாள் துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான முக ஸ்டாலின், 2 ஜி அலைவரிசை விவகாரத்தில் சிக்கி பதவியிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன் உள்பட அனைத்து தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதி - முக ஸ்டாலின் பேச்சு

முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயில் மூலம் கோவை வந்துவிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை முக அழகிரி தனது ஆதரவாளர்கள் மூர்த்தி, மூக்கையா ஆகியோருடன் போய் சந்தித்தார்.

பிற்பகல் வரை கட்சி விவகாரம் குறித்து அவர்கள் கடுமையாக விவாதித்ததாகத் தெரிகிறது.

ஆனால் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, அனைவரும் அரங்குக்கு வந்துவிட்டனர்.

இன்றைய கூட்டத்தின் முடிவில் ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுமா, அழகிரிக்கு வேறு புதிய கட்சிப் பதவி தரப்படுமா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்.
nantryhttp://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: