வெள்ளி, 8 ஜூலை, 2011

கலாநிதி உள்பட பலரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., திட்டம்

புதுடில்லி: தயாநிதி மீதான புகாரின்படி இது தொடர்பாக தயாநிதியின் சகோதரரான கலாநிதியையும் ( சன் டி.டி.எச்சில் மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடி முதலீடு தொடர்பாக ) விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சி.பி.ஐ., உயர் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் ஒரு புகழ்பெற்ற மாபெரும் தனியார் ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடமும் , மாக்ஸிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணனிடமும் சி.பி.ஐ., விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. சன் டி.வி., நடத்தி வரும் கலாநிதியிடம் மாக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்த காலத்தில் , (ஏர்செல்லுக்கு அலைவரிசை ஒதுக்கிய தருணம்) தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்கும் படியும் சி.பி.ஐ., வட்டாரம் கேட்கவிருப்பதாகவும் தெரிகிறது. தயாநிதி காலத்தில் மூத்த அதிகாரிகளாக இருந்த ஜே.எஸ்.,சர்மா மற்றும் டி. எஸ்., மாத்தூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ.,திட்டமிட்டுள்ளது. இதில் சர்மா தற்போது தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனாக உள்ளார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271714

கருத்துகள் இல்லை: