வியாழன், 21 ஜூலை, 2011

தலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்

கரூர்: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கட்சி தலைவர் கருணாநிதியிடம் சரணடைந்தார். இதனால் துரை முருகன் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

2ஜி ஊழல் விவகாரத்தில் கைதாகி முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் திஹார் சிறையில் இருப்பது, இதே விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் திமுக தலைவர் கருணாநிதி கடும் மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் திஹார் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்றபோது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றது. இதனால் கோபம் அடைந்த கருணாநிதி, துரைமுருகனை கடுஞ் சொற்களால் திட்டியதாக தகவல்கள் வெளியானது.

இதனால் மனம் உடைந்த துரைமுருகன் கட்சியில் தனது உழைப்பிற்கும், தியாகத்திற்கும் மரியாதை இல்லையே என ஆவேசப்பட்டு கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பரபரப்பு பேச்சு கிளம்பியது. மேலும் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இதற்கு சமாதானம் சொல்லியும் கூட அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில் துரைமுருகனை கருணாநிதியே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினாராம். இதனால் உள்ளம் குளிர்ந்து போன துரைமுருகன் தலைவரே உங்களை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது. என்னை விட்டு உங்களாலும் இருக்க முடியாது என தனது வழக்கமான ஸ்டைலில் போட்டு தாக்கினாராம். இதனால் அந்த இடத்தில் ஒரே சிரிப்பலையாம்.

ஒரு வழியாக துரைமுகன் விவகாரம் முடிவுக்கு வந்தது.


http://thatstamil.oneindia.in/news/2011/07/21/durai-murugan-stay-dmk-aid0128.html

கருத்துகள் இல்லை: