வியாழன், 7 ஜூலை, 2011

கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு

புதுதில்லி, ஜூலை,7: தயாநிதி மாறன் ராஜிநாமா தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நேற்று இரவு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாநிதி மாறன் பதவிவிலகியே தீர வேண்டும் என்று அவர்கள் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாகவும், கருணாநிதியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
சிபிஐ விசாரணை அறிக்கையின் சட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் மற்றும் அட்டார்னி ஜெனரல் வாஹன்வதி ஆகியோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் அதன் பின்னரே தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
http://www.dinamani.com

2 கருத்துகள்:

பொன்மலை ராஜா சொன்னது…

ஊழல் புகார்களின் காரணமாக வரிசையாக மத்திய மந்திரிகள் இராஜினாமா செய்து வருகின்றனர்! ஆனால் கூட்டுப் பொறுப்புள்ள மந்திரிசபைக்கு தலைமை வகிக்கும் பிரதமரும் ஆளுங்கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சோனியாவும் தங்களுக்கும் மந்திரிகளுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்! இதன் மூலம் இந்திய ஜனநாயக ஆட்சி முறைக்கே உலக அளவில் அவமானத்தைத் தேடித் தந்து கொண்டிருக்கும் மன்மோகன் முதலில் குடியரசுத் தலைவரை சந்தித்து தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும்! நல்லாட்சி தரக் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு வேறு யாராவது பிரதமராக வழிவிட வேண்டும்! அது சாத்தியப்படவில்லை என்றால் நாடு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்!

anshan சொன்னது…

தனது அமைச்சரவையில் யார் அமைச்சர் என தீர்மானிப்பது பிரதமர் அல்ல என்பது இதன்மூலம் தெரிகிறது அனால் பிரதமரை பலவீனமானவர் என்றால் அவருக்கு மூக்கின் மேல் கோபம் வருகிறது பத்திரிக்கைகள் மீது குற்றம் சாட்டுகின்றார் இந்ந்த ஆட்சியால் நாடு குட்டிசுவர் ஆகுகின்றது இவர் மற்றும் இவரது அமைச்சரவை விலகி தேர்தலை சந்தித்தால் தான் நல்லது தேர்தல் செலவு இருந்தாலும் ஒரு நல்ல ஆட்சியாவது கிடைக்கும் இவரால் நாடு 20 ஆண்டுகளுக்கு மேல் பின்தங்கி விட்டது இவர் பலவீனமான பிரதமர் அல்ல தனது ஆட்சி நீடிக்க தன்னை சுற்றி ஓடும் சாக்கடைகளை பற்றி கவலை படாத கேவலமான பிரதமர் இந்தியாவின் தலையெழுத்து அது சோனியாவிடம் மாட்டி தவிக்கின்றது