வியாழன், 7 ஜூலை, 2011

மீடியாக்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும், மாறன் விதிவிலக்கல்ல-கருணாநிதி

சென்னை: இந்தியாவில் நடைபெறுவது மீடியாக்களின் ஆட்சி. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் கைது குறித்து திமுகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. திமுக தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்து தயாநிதிமாறன் குறித்துக் கேட்டனர்.

அப்போது கருணாநிதி கையில் எழுதி வைத்திருந்த குறிப்பை எடுத்து வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகில் குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல என்றார் கருணாநிதி.

பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், தயாநிதி மாறனுக்கு திமுக துணை இருக்குமா என்று கேட்டபோது, இருக்கும் என்றார் கருணாநிதி.

நேற்று இரவு சோனியா காந்தி உங்களுடன் பேசினாரா என்ற கேள்விக்கு தலையை அசைத்தபடி இல்லை என்றார் கருணாநிதி.

தயாநிதி மாறன் ராஜினாமாவால் காலியாகியுள்ள பதவியை திமுக மீண்டும் கேட்டுப் பெறுமா என்ற கேள்விக்கு, தெரியவில்லை என்றார் கருணாநிதி.


http://thatstamil.oneindia.in/news/2011/07/07/karunanidhi-attacks-media-defends-maran-aid0091.html

கருத்துகள் இல்லை: