வெள்ளி, 1 ஜூலை, 2011

புலம்பெயர்ந்தோர் பற்றிய தகவல்களைத் திரட்ட புதிய புலனாய்வுப்பிரிவு - கனடாவின் உதவியுடன் உருவாக்குகிறது சிறிலங்கா

புலம்பெயர்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கான புதிய புலனாய்வுப் பிரிவு ஒன்றையும், தொலைந்து போன கடவுச்சீட்டுகள் பற்றிய புள்ளிவிபரங்களை இணையம் மூலம் கோவைப்படுத்துவதற்கான பிரிவு ஒன்றையும் உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி, மீளவும் தீவிரவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த இரு பிரிவுகளும் இந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்படவுள்ளன.

அனைத்துலக காவல்துறையிடம் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் 20மில்லியனுக்கும் அதிகமானோர் பற்றிய இரகசிய அறிக்கைகளையும், தொலைந்து போன கடவுச்சீட்டுகள் பற்றிய விபரங்களையும் சிறிலங்கா அரசினால் பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் மூலம் தீவிரவாதிகள் அல்லது பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் நாட்டுக்குள் வருபவர்களையும் இணங்காணக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசுக்கு கனடா உதவி வழங்கவுள்ளது.

http://www.puthinappalakai.org/view.php?20110701104181

கருத்துகள் இல்லை: