புதன், 6 ஜூலை, 2011

திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் மத்திய அமைச்சர் அழகிரி

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள கனிமொழி எம்.பி.யை அவரது சகோதரர் அழகிரி கடந்த திங்கட்கிழமை சந்தித்தார்.

2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் கருணாநிதி இரண்டு முறை சிறையில் வைத்து பார்த்தார். மு.க. ஸ்டாலினும் அன்மையில் டெல்லி சென்று தனது சகோதரி கனிமொழியை சந்தித்தார். ஏராளமான திமுகவினரும் அவரை சிறையில் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சரும், அவரது சகோதரருமான மு.க. அழகிரி கடந்த திங்கட்கிழமை கனிமொழியை திஹார் சிறையில் சந்தித்து பேசினார். திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. பெரியகருப்பன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

கனிமொழியை சந்திப்பதற்காக திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டனர். அவர்கள் இன்று கனிமொழனியை நீதிமன்றத்திலோ அல்லது திஹார் சிறையிலோ சந்திப்பார்கள் என்று தெரிகிறது.

கோடை கால விடுமுறைக்குப் பிறகு நேற்று முன் தினம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. இதையடுத்து 2ஜி வழக்கில் கைதாகியுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த 2 நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கனிமொழிக்கு ஆதரவாக அவரது கணவரும், திமுக மகளிர் அமைப்பு நிர்வாகிகளும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/06/mk-azhagiri-meets-kanimozhi-aid0128.html

கருத்துகள் இல்லை: