ஞாயிறு, 17 ஜூலை, 2011

ஆடி மாதம் பிறந்தது-ஆறுகளில் மக்கள் புனித நீராடினர்

சென்னை: முக்கியத் தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் இன்று பிறந்தது. இதையொட்டி ஆறுகளில் மக்கள் புனித நீராடி வழிபட்டு, ஆடி மாதத்தை வரவேற்றனர்.

இன்று ஆடி மாதப் பிறப்பாகும். ஆடி மாதம் தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். இந்த விதைப்பு சிறந்த அறுவடைக்கு வித்திட வேண்டும் என்ற வேண்டுதலுடன் விதைப்புப் பணிகளைத் தொடங்குவது விவசாயிகளின் வழக்கமாகும்.

ஆடி மாதப் பிறப்பின்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திருப்பபூர், நாமக்கல், சேலம், கரூர், கோவை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், புதுமணத் தம்பதிகள் கோவில் முன்புள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல பவானி கூடுதுறையிலும் பக்தர்கள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் புனித நீராடி ஆடிப் பிறப்பை வரவேற்றனர்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/17/people-welcome-first-day-aadi-month-aid0091.html

கருத்துகள் இல்லை: