சனி, 23 ஜூலை, 2011

ஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்புக்கு புறப்பட்டது

ஊட்டி: தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 சிறீலங்கா ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கொழும்புவுக்கு புறப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் சிறீலங்கா ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இதற்கு தமிழகத்தி்ல உள்ள பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.

இந்நிலையில் சிறீலங்கா ராணுவத்தினருக்கு குன்னூரில் பயிற்சி தொடங்கியது. இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து குன்னூரில் நடந்த பயிற்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டு சிறீலங்கா ராணுவத்தினர; கொழும்புக்கு புறப்பட்டனர்.

nanry http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: