வியாழன், 7 ஜூலை, 2011

கலாநிதி புகார்களிலும் நடவடிக்கை:ஜெயலலிதா உறுதி

சென்னை:""கலாநிதி மீதான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தயாநிதி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:இது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்னை. முன்னதாகவே அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது வெகு முன்பாகவே, பிரதமர் அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். கலாநிதி, மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சில புகார்கள் வந்துள்ளன; ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வின் கதை முடிவை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271134

கருத்துகள் இல்லை: