வியாழன், 21 ஜூலை, 2011

ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு

சென்னை: இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியமர்த்துவது குறித்து முதல்வருக்கு விளக்கினார். அவர் கூறிய விவரங்களை முதல்வர் கவனமாகக் கேட்டார்.

பின்னர் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதை உடனே நிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கரியவாசத்திடம் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/21/sl-high-commissioner-prasad-kariyawasam-meets-jaya-aid0128.html

கருத்துகள் இல்லை: