திங்கள், 18 ஜூலை, 2011

பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியும். தனக்கும், பிரதமர் உள்ளிட்ட அரசுத் துறையினருக்கும் இடையேயான அனைத்து கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சிபிஐ கோர்ட்டில் தானே வாதாட தயாராகியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.

2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கபப்ட்டு விட்டது.

இதுதொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே அனைத்து நடைமுறைகளிலும் பிரமதருக்கும் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களுடன் வாதாடவிருக்கிறாராம் ராசா.

மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள் குறித்து யார் யாருக்கு என்னென்ன தெரியும், யார் யார் எப்படிச் செயல்பட்டனர் என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும் சிபிஐ கோர்ட்டில் முன்வைக்கப் போகிறாராம் ராசா.

இதுபோக தனது வாதத்திற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராசா வைக்கப் போகும் ஆதாரங்கள் மற்றும் வாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குறிப்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்ற பரபரப்பு டெல்லியில் நிலவுகிறது.

இன்று ராசாவிடம் சிபிஐ விசாரணை

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட 3 பேரிடம் இன்று பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் வைத்து சிபிஐ விசாரணை நடைபெறவுள்ளது.

ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ரிலையன்ஸ் அடாக் குழும நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி, விசாரணைக்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து இன்று மூன்று பேரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். வழக்கமாக தஙக்ளது காவலில் எடுத்து யாரையும் விசாரிப்பது சிபிஐயின் வழக்கம். இருப்பினும் ராசா உள்ளிட்டோரை, சிபிஐ கோர்ட் அமைந்துள்ள பாட்டியாலா கோர்ட் வளாகத்திலேயே வைத்து விசாரிக்கவுள்ளது சிபிஐ.

இதற்கிடையே, ஏற்கனவே 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சிபிஐ தற்போது 3வது குற்றப்பத்திரிக்கையைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/18/cbi-grill-raja-two-others-patiala-court-campus-aid0091.html

கருத்துகள் இல்லை: