சனி, 9 ஜூலை, 2011

உலகில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் மும்பை- டெல்லி!

டெல்லி: உலகில் செலவு குறைந்த நகரங்களின் வரிசையில் மும்பை 3வது இடத்தையும் டெல்லி 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

Economist Intelligence Unit என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் உலகின் 134 நகரங்களில் ஆய்வு நடத்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து செலவு, சோப்பு என அனைத்து வகையான செலவுகளையும் ஆய்வு செய்தது இந்த அமைப்பு. மேலும் மக்களிடையே சர்வேயும் நடத்தியது.

அதில் செலவு குறைந்த நகராக துனிசியா நாட்டின் துனிஸ் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி இரண்டாவது இடத்தையும், மும்பை 3வது இடத்தையும், ஈரான் தலைநகர் டெஹ்ரான் 4வது இடத்தையும், டெல்லி 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

செலவு குறைந்த பிற நகர்களாக அல்ஜீரியா நாடடின் அல்ஜியர்ஸ், செளதி அரேபியாவின் ஜெட்டா, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா, பனாமா தலைநகர் பனாமா சிட்டி, கொழும்பு ஆகியவையும் உள்ளன.

செலவு மிகுந்த நகரங்கள்...:

சர்வதேச அளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்திலும், நார்வே தலைநகர் ஓஸ்லோ இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்திலும் ஜப்பானின் ஒசாகா கோப் நகரம் உள்ளது.

நான்காவது இடத்தில் பாரிஸ் நகரும், 5வது இடங்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரும் உள்ளன.

இதைத் தொடர்ந்து சிட்னி, மெல்போர்ன் ஆகிய ஆஸ்திரேலிய நகரங்களும், பிராங்பர்ட், ஜெனீவா ஆகியவையும் உள்ளன.

அதிக செலவு பிடிக்கும் உலகின் 10வது நாடு என்ற இடத்தில் சிங்கப்பூர் உள்ளது
http://thatstamil.oneindia.in/news/2011/07/09/mumbai-new-delhi-among-5-cheapest-places-in-world-aid0090.html

கருத்துகள் இல்லை: