செவ்வாய், 12 ஜூலை, 2011

வடிவேலு பட பாணியில் கிணற்றை 'ஆட்டையைப்' போட்ட அதிமுகவினர்- அதிகாரிகள் மீட்பு

கடையநல்லூர்: அதிமுகவினர் ஆட்டையை போட்ட கிணற்றை பொதுமக்கள் கோரிககை காரணமாக அதிகாரிகள் தோண்டி எடுத்து மீட்டனர்.

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை ஓட்டி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக செயலாளர் பொய்கை மாரியப்பன், ஓன்றிய அதிமுக செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன் உள்ளிட்ட அதி்முக பிரமுகர்கள் நிலம் வாங்கியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கிணற்றை ஓட்டி கிடந்த புறம்போக்கு நிலத்தையும், கிணத்தையும் தங்கள் வசமாக்கி கிணற்றை மூடி அப்பகுதியில் வீட்டுமனை அமைத்தனராம்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், லெட்சுமணன், குழந்தைவேலு ஆகிய 3 பேர் கிணற்றை மீட்டு தர கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 10-9-2010 அன்று உயர்நீதிமன்ற கிளை உடனடியாக கிணற்றை மீட்க நகராட்சிக்கு உத்தரவி்ட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை குறித்து நெல்லை கலெக்டர் நடராஜனுக்கும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அதிமுகவினர் ஆட்டையை போட்ட கிணற்றை உடனடியாக தோண்டி கொடுக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் மாற்று இடத்தில் குடிநீர் கிணறு தோண்டி கொடுக்க முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் விரைந்து சென்று புதிதாக தோண்டப்பட்ட கிணறு பணியை நிறுத்தி ஏற்கனவே கிணறு இருந்த இடத்தில் கிணறு தோண்டும் பணியை அதிகாரிகள் முன்னின்று நடத்தினர்.

நில மோசடிகளுக்காக தனிப்பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கும் அதிமுக ஆட்சியில் அதிமுகவினரே கிணற்றை ஆட்டையை போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளJ
http://thatstamil.oneindia.in/news/2011/07/12/officials-seize-well-from-admk-encroachers-aid0175.html

கருத்துகள் இல்லை: