வெள்ளி, 1 ஜூலை, 2011

சிறிலங்காவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சும்மா விட்டு விடாது - நவி பிள்ளை மீண்டும் எச்சரிக்கை

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் முன்னர் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் முழுமை பெறாமல் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய விசாரணை அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஒருவருக்கேனும் தண்டனையை கொடுக்கப்படவில்லை என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுபோன்றே மீண்டும் நடந்தால், அனைத்துலக சமூகத்தின் தலையீட்டின் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நவி பிள்ளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயற்படும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கடந்த செவ்வாயன்று அமெரிக்கா
வலியுறுத்தியிருந்த நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

http://www.puthinappalakai.org/view.php?20110701104180

கருத்துகள் இல்லை: