வெள்ளி, 15 ஜூலை, 2011

கூகுளின் ஒரு பங்கு விலை எவ்வளவு தெரியுமா?

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவ வரலாற்றிலேயே இல்லாத அளவு எக்கச்சக்க வருவாயைக் குவித்துள்ளது, இரண்டாம் காலாண்டில் கூகுள் நிறுவனம்.

இதன் விளைவு அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் ஜிவ்வென்று உயர்ந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி கூகுள் பங்கு ஒன்றின் விலை ரூ 25,891.26 ($581.63).

எரிக் ஷ்மித்துக்குப் பதில் புதிய சிஇஓவாக லாரி பேஜ் வந்த பிறகுதான் இந்த அளவு வருமான உயர்வும், பங்கு மதிப்பு உயர்வும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சைபர் சந்தையில் எக்கச்சக்க போட்டி வந்த பிறகும், கூகுள் விளம்பர வருவாயில் கோலோச்ச இவரது அணுகுமுறையும் காரணம் என்கிறார்கள்.

இந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கூகுள் 2.5 பில்லியன் அதிகமாக சம்பாதித்தது. இது கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் மொத்த வருவாய் என்று பார்த்தால் இதே காலகட்டத்தில் 9 பில்லின்களாகும். கூகுள் நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு இது. இதனால் இன்றைய பங்குச் சந்தையில் கூகுள் பங்குகளின் மதிப்பு ரூ 25,891.26 ($581.63) ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே இரு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கூகுள் பிளஸுக்கு கிடைத்துள்ள வரவேற்பும் பங்குகளின் மதிப்பை மேலும் உயர்த்தும்என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/15/google-2q-earnings-soar-its-shares-value-aid0136.html

கருத்துகள் இல்லை: