சனி, 9 ஜூலை, 2011

விளையாட்டு வீரர்கள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது'

விளையாட்டு வீர வீராங்கனைகள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது. விளையாட்டு என்பது விளையாட்டு வீர வீராங்கனைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. விளையாட்டு அவர்களின் நேசிப்பிற்குரிய ஒன்றாகும். குறிப்பாக துடுப்பாட்ட விளையாட்டானது இனம் மற்றும் சமய வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒற்றுமையுடன் விளையாட வழிவகுக்கின்றது.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Sydney Morning Herald ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் Peter Roebuck எழுதியுள்ள கருத்தாடலில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள் என்பன தற்போது அவுஸ்திரேலிய துடுப்பாட்ட [Cricket] வீரர்கள் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் தொடர்பான ஆவணப்படம் இந்த வாரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் Four Corners ல் வெளியிடப்பட்ட பின்னர் அத்திரைப்படத்தைப் பார்த்த அந்நாட்டின் பிரபல துடுப்பாட்ட வீரர் ஒருவர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதுடன் பயங்கரக் கனவுகளைக் காண்பதாகவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய விளையாட்டு அமைப்பானது சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளனர்.

இது தொடர்பான நிலைப்பாட்டை எடுக்கும் வரை அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், சிறிலங்காவுடன் எந்தவொரு விளையாட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலைகள், 1980ல் சிம்பாப்வேயின் மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்றதொரு சம்பவம் எனவும் அவுஸ்திரேலிய விளையாட்டுச் சமூகம் தெரிவித்துள்ளது.

1950 களில் மேற்கிந்தியத் தீவானது தனது நாட்டின் கிரிக்கட் தலைவராக ஒரு கறுப்பினத்தவரை நியமிப்பதில் மறுப்புத் தெரிவித்தபோது அதனை சிலர் கண்டித்தனர். அந்த மக்கள் துடுப்பாட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் lbw விதிமுறை தொடர்பாகப் பேசுவதில் மிக விருப்பம் கொண்டிருந்தனர்.

மிக மகிழ்ச்சியான மேற்கிந்தியத்தீவு மக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்கும் நற்பண்பு கொண்ட சிறிலங்கா மக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் என்பவற்றை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இவ்வொளிப்படங்கள் தொடர்பான உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன.

இந்நிலையில் விளையாட்டு வீர வீராங்கனைகள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது. விளையாட்டு என்பது விளையாட்டு வீர வீராங்கனைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. விளையாட்டு அவர்களின் நேசிப்பிற்குரிய ஒன்றாகும். குறிப்பாக துடுப்பாட்ட விளையாட்டானது இனம் மற்றும் சமய வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒற்றுமையுடன் விளையாட வழிவகுக்கின்றது.

அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முஸ்லீம், இந்து, பௌத்தம், கிறீஸ்தவம் எனப் பல்வேறு மதங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். இன மத பேதமின்றி சகல மக்களுக்கும் உதவ வேண்டிய கடப்பாடு விளையாட்டு வீரர்களுக்கு உண்டு.

தனது உள்ளுர் விடயங்களில் தலையீடு செய்யவேண்டிய தேவை விளையாட்டுத்துறைக்கு இல்லை. சட்டபூர்வமான கட்சிகளுக்கிடையிலான தெரிவை அரசியல் சட்டங்கள் வழங்குகின்றன. இறையாண்மைத் தேசங்கள் தமக்கான நலனில் அதிக அக்கறை காட்டுகின்றன. சர்வதிகார ஆட்சி என்பது பிறிதொரு விதமான ஆட்சியை மேற்கொள்கின்றது.

கடந்த 40 ஆண்டுகளில் துடுப்பாட்ட உலகானது கறுப்பினத்தவர்கள் மீதான நிறவெறி ஆட்சி மற்றும் சிம்பாவேயின் ZANU-PF கொடுங்கோன்மை ஆட்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து நின்றது.

இந்த இரு சம்பவங்களிலும், விளையாட்டைப் புறக்கணிப்பது தொடர்பான விவாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டன. இந்த அடிப்படையில், தென்னாபிரிக்காவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின் தென்னாபிரிக்காவில் மீண்டும் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

சிம்பாப்வேயின் எதிர்க்கட்சியினரின் விட்டுக் கொடுப்பில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுவதால் அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் A அணியினர் சிம்பாப்வேயுடன் கிரிக்கட் விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது சிறிலங்கா விவகாரத்தை துடுப்பாட்ட உலகம் தனது கவனத்தில் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டில் சிறிலங்காவிற்கான தனது சுற்றுப் பயணத்தை பிரிட்டன் துடுப்பாட்ட அணி மேற்கொள்வதற்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனது நாட்டு அரசாங்கத்திடம் பிரிட்டன் துடுப்பாட்ட அணித் தலைவர் மைக்கல் அதேற்றன் [Michael Atherton] வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எதியோப்பிய உணவு நெருக்கடிக்குப் பின்னர் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையில் காண்பிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் கொலைக்களங்கள் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அதேற்றன் மேலும் விபரித்துள்ளார்.

சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கமே இவ்வாறாள கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர்க் காலத்தில் எந்தவொரு ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை. அத்துடன், தற்போது சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களை ஆதாரத்துடன் நிரூபித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கும் சிறிலங்கா அரசாங்கமானது பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

எந்தவொரு நாட்டிற்குச் செல்வதற்கான தீர்மானத்தை எடுக்க முன்னரும், அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் அது தொடர்பாக மிக ஆழமாகச் சிந்திப்பது வழமையாகும்.

சிறிலங்காவில் பல பத்தாண்டு காலங்களாக இடம்பெற்று முடிவிற்கு வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் பெரும் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது முடிவிற்கு வந்ததன் பின்னர் தற்போது அங்கு வெளிப்படையாக அமைதி நிலவுகின்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கைகளில் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்கள் குவிந்துள்ளன.

இது தொடர்பில் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பான புறக்கணிப்பை எங்கிருந்து ஆரம்பித்து முடிப்பது என்பதைத் தெரிந்து கொள்வது மிகக் கடினமான செயலாக உள்ளது.

நியாயமற்ற யுத்த நடவடிக்கைகளால் ஈராக்கியப் பொதுமக்கள் பல குண்டுத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டனரா? மிக மோசமான செயற்பாடுகளுக்கும் தீமையான முறைமைகளுககும் இடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்குவதென்பது மிகக் குறைவே.

துடுப்பாட்ட உலகமானது தனக்கான விளையாட்டுத் துறை சார் பெருமைகளைக் கொண்டுள்ள அதேவேளை, இது பல துறைசாரா திருப்திகரமான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.

மேற்கிந்தியத்தீவின் துடுப்பாட்ட தலைவராக கறுப்பினத்தவர் ஒருவரை நியமிப்பதற்கு வழிசமைத்தமை, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட அணியில் முஸ்லீம் இனத்தவர் ஒருவர் உள்வாங்குப்பட்டமை, பிறிதொரு முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்திய துடுப்பாட்ட அணித் தலைவராக்கியமை, தமிழர் ஒருவர் தனது நாட்டுக்காக 800 ரெஸ்ற் விக்கற்றுக்களைப் Test wickets பெற்றுக் கொண்டமை போன்றன துடுப்பாட்ட உலகால் சாதிக்கப்பட்ட விடயங்களாக உள்ளன.

விளையாட்டுத் துறையால் முன்னேற்றத்தைக் காட்ட முடியும். ஆனால் விளையாட்டுத்துறை சார் வீர, வீராங்கனைகள் தாம் பிறிதொரு உலகில் வாழ்வது போன்று பாசாங்கு செய்ய முடியாது. அதாவது உலகம் வேறு விளையாட்டு வேறல்ல. துன்பங்களில் பங்கு கொள்ளாது தப்பித்தல் என்பது சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை: