வெள்ளி, 1 ஜூலை, 2011

ராசா, கனிமொழிக்கு பிணை வழங்க வேண்டும்: ஜஸ்வந்த் சிங்

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

யாராவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால், அது கொலை, திருட்டு போன்ற குற்றமாக இல்லாத நிலையில், விசாரணை நடைபெறும் சூழலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் வைக்கப்படத் தேவையில்லை.
ஏனெனில், நிரந்தரமாக அவர்களுக்கு பிணை மறுக்க இயலாது..

பிணைய விடுதலை என்பது குடிமக்களின் உரிமை. ராசாவுக்கும், கனிமொழிக்கும் பிணை வழங்கப்பட வேண்டும்.இது தொடர்பாக பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

அதே சமயம் இது எனது தனிப்பட்ட கருத்துதானே தவிர, பா.ஜனதாவின் கருத்து அல்ல. எனினும், அவர்களை நிரந்தரமாக சிறையில் வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறவில்லை.

இவ்வாறு அந்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1107/01/1110701057_1.htm

கருத்துகள் இல்லை: