புதன், 6 ஜூலை, 2011

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருக்கலாம் என தகவல்

திருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சியுள்ள திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பல லட்சம் கோடிக்கு பொக்கிஷங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த அளவுக்கு இக்கோவிலில் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இவை எப்படி வந்தது தொடர்பாக ஒரு தகவல் உலவுகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவின் குருநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது 1949ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்பநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர்தான் திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராமவர்மா ஆட்சி செய்தார். அப்போதுதான் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாறியது.

1175ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்த போதே அரசாட்சியும் பத்பநாபர் கோவிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர் என் சொத்துகள் எல்லாம் பத்மநாபருடையது, நான் அவருடைய சேகவன் என்று அறிவித்த தனது பெயரை பத்மநாபதாசர் என்றும் மாற்றிக் கொண்டார்.

கடந்த 1813ல் இருந்து 1846 வரை ஆண்ட சுவாதி திருநாள், பிரபலமான கர்நாடக இசை கலைஞராக இருந்தவர், ஆங்கிலமொழி பற்றுக் கொண்டவர். 1921-1992ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலவர்மாதான் இந்தியாவில் மரண தண்டனையை ஓழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1936ல் திவானாக இருந்த சிபி ராமசாமி அய்யர் யோசனைப்படி தீ்ண்டாமையை ஓழித்து கோயிலுக்குள் எல்லோரும் சென்று தரிசிக்க வைத்தவரும் இவர்தான். பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துகளை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டி காட்டியுள்ளன.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து 1941ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதான பட்டா மதிளகேம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார்.

திருவிதாங்கூர் பரம்பரையில் உள்ள முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் வரையும், இப்போதுள்ள வாரிசுகள வரையும் சொத்துகள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின் சொத்துகளை கட்டி காத்து வந்துள்ளனரே தவிர அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி கோவிலில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதுத. ஆனால் இன்னும் ஒரு அறை திறக்கப்படாத நிலையில் அங்கு மேலும் சில லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள், கணக்கிடவே முடியாத அளவிலான பொக்கிஷங்கள் குவிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/06/unbelievable-treasure-padmanabha-swamy-temple-aid0091.html

கருத்துகள் இல்லை: