புதன், 20 ஜூலை, 2011

சென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி

சென்னை: நேற்றிரவு திருவல்லிக்கேணியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு சென்னையில் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படுகிறது. கடந்த வாரம் அண்ணா நகர், மந்தவெளி உள்பட சில இடங்களில் நிலம் லேசாக அதிர்ந்தது.

இந்நிலையில் நேற்றிரவும் 9.30 மணிக்கு திருவல்லிக்கேணியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர்.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் நேற்றிரவு கூறியதாவது,

திருவல்லிக்கேணியில் வசிக்கும் பலர் நேற்றிரவு நில அதிர்வை உணர்ந்ததாக எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். ஆனால் நில அதிர்வின் அளவு நாளை(இன்று) தான் தெரியும் என்றனர்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/20/light-tremor-chennai-aid0128.html

கருத்துகள் இல்லை: