திங்கள், 4 ஜூலை, 2011

கண்களால் கணனி செய்!

பிரிக்க முடியாதது எதுவோ? என்று கேட்டால் கம்ப்யூட்டரும் மவுசும் என்று ஆங்கிலத்திலும் ஓடினேட்டரும் சுறியும் என்று பிரெஞ்சிலும் என்று பதில் சொன்னீர்கள் என்றால்இ அது இனிமேல் தவறு. இப்போது மவுஸில்லாத அல்லது சுறி கம்ப்யூட்டர்கள் லேப் டாப்கள் வந்துவிட்டன.
டோப்லி என்ற சுவிட்ஸர்லாந்து கம்பெனி மவுஸில்லாத லேப் டாப்களைத் தயாரித்திருக்கிறது.
இந்த லேப் டாப் முன்பு அமர்ந்து அதை இயக்குபவர்களின் கண்ணசைவிலிருந்து லேப் டாப் இயங்குகிறது. மவுஸýக்குப் பதிலாகக் கண்கள்.
கண்களின் அசைவை உணரும் புற ஊதாக் கதிர்கள் மூலமாக இந்த லேப் டாப் இயங்குகிறது.
லேப் டாப்பில் உள்ள ஒரு ஃபைலை நீங்கள் சிறிது உற்றுப் பார்த்தால் அந்த ஃபைல் தானாகவே ஓப்பன் ஆகும். பிறகு உங்கள் கண்கள் பார்ப்பதற்கேற்ப கர்ஸர் மூவ் ஆகும். நீங்கள் ஒரு ஃபைலில் நான்கு வரிகள் பார்த்துவிட்ட பக்கத்து சீட் இளம்பெண்ணுடன் வழிந்து கொண்டிருந்தால் நீங்கள் எந்த வரியைப் பார்த்தீர்களோ அந்த வரியிலேயே கர்ஸர் லாக் ஆகி நிற்கும். அதுமட்டுமல்ல அந்த நேரத்தில் லேப்டாப் சற்று 'டிம்' ஆகி மின்சாரத்தைச் சேமிக்கும். உடற்குறைபாடு உள்ளவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கணினியைப் பயன்படுத்த முடியாமல் தவித்த போது மவுசுக்குப் பதிலாக கண்ணசைவைப் பயன்படுத்தலாம் என்ற ஐடியா தோன்றியது.
இந்தக் கண் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்தி இப்போது இன்னொரு பயனுள்ள கண்டுபிடிப்பும் கூட வந்திருக்கிறது.
இரவு நேரங்களில் காரை ஓட்டுபவர்கள் கொட்டாவி விட்டுக் கொண்டு சற்றுக் கண்களை மூடினால் அவர்களை எச்சரித்து எழுப்பிவிடக் கூடிய ஓலியை எழுப்பும் கருவிகளை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள்!

http://www.dinamani.com/

கருத்துகள் இல்லை: