வெள்ளி, 22 ஜூலை, 2011

உச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்லி தீபாவளி

சிவகாசி: மூலப்பொருட்களின் விலை உயர்வு, வாட் வரி உயர்வு போன்ற காரணங்களால் இந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு விலை 40 சதவீதம் அதிகரிக்கிறது. வெளிமாநில ஆர்டர் குறைவதால் பட்டாசுகள் தேக்கமடையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 94 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. பட்டாசு தயாரிக்க பயன்படும் முக்கிய பொருட்களான அலுமினியம் பவுடர், வெடி உப்பு, பச்சை உப்பு, பேப்பர் மற்ரும் அட்டைகள்,றுசல்பைன் பேப்பர் போன்வற்றின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்தவுடன் அடுத்தாண்டுக்கான ஆர்டர்களை பட்டாசு நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீத விலை உயர்வுடன் பதிவு செய்யும். எந்த வருடத்தையும் விட இந்த வருடம் மூலப் பொருட்களின் விலை உயர்வு ஒவ்வொரு மாதமும் வித்தியாசப்படுவதால் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் பட்டாசு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. தீபாவளிக்கான ஆர்டர்கள் எடுக்கப்பட்டு மே மாதம் முதலே வெளி மாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி தொடங்கும்.

இந்தாண்டு விலை உயர்வு காரணமாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஆர்டர்களில் பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. ஆயிரககணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: