புதன், 13 ஜூலை, 2011

lதயாநிதி மாறனுக்கு எதிராக 12 சாட்சியங்கள் பதிவு- விரைவில் நேரில் விசாரணை

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராகஇதுவரை 12 சாட்சியங்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. விரைவில் அவரை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ தயாராகி வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் தயாநிதி மாறன். ஏர்செல் விவகாரத்தில் அவர் மாட்டியுள்ளார். அவருக்கு எதிராகவும், கலாநிதி மாறனுக்கு எதிராகவும், ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள வாக்குமூலம் மிகவும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறனுக்கு எதிராக 12 சாட்சியங்களை இதுவரை சிபிஐ பதிவு செய்துள்ளதாம். விரைவில் தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ நேரில் விசாரணை நடத்தவும் தயாராகி வருகிறது.

தயாநிதி மாறனுக்கு எதிராக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், டிராய் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாம்.

மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல்தலைமையிலான ஒரு நபர் கமிட்டியும் ஏற்கனவே தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டியுள்ளது. அதையும் முக்கிய ஆதாரமாக சிபிஐ சேர்த்துள்ளது.

அனைத்துப் பூர்வாங்க வேலைகளையும் முடித்த பின்னர் தயாநிதி மாறன் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/13/cbi-gatherss-statements-against-dayanidhi-maran-aid0091.html

கருத்துகள் இல்லை: