செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சிறையில் பலருக்கு கல்வியறிவு புகட்டியவர் பேரறிவாளன்: சகோதரிகள் பெருமிதம்

எங்களது சகோதரர் குறித்து நாங்கள் பெருமிதத்துடன்தான் இருக்கிறோம். அவர் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மூலம் எத்தனையோ பேர் சிறைக்குள்ளேயே படித்து பட்டமும் வாங்கியுள்ளனர். பலருக்குக் கல்வி அறிவு புகட்டிய பெருமை பேரறிவாளனுக்கு உண்டு என்று கூறியுள்ளனர் அவரது இரு சகோதரிகளும்.

குயில்தாசன்-அற்புதம் அம்மாள் தம்பதிக்கு பேரறிவாளன் ஒரே மகன் ஆவார். இவர்களுக்கு அருள் செல்வி, அன்புமணி என இரு மகள்களும் உள்ளனர்.

இவர்களில் அருள் செல்வி சிதம்பரம் அண்ணாமலப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அன்புமணி, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகிறார்.

19 வயதிலேயே சிறைக்குப் போனவர் பேரறிவாளன். இதனால் இரு சகோதரிகளின் திருமணத்தையும் அவர் காணவில்லை. மேலும் அவர்கள் இருவருமே பேரறிவாளன் திரும்பி வரும் வரை மணம் புரியப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தவர்கள். இருப்பினும் பேரறிவாளனின் வற்புறுத்தலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தங்களது சகோதரர் குறித்து அருள்செல்வி கூறுகையில், எங்களது சகோதரர் அறிவு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க மாட்டார். அடுத்தவருக்கு எந்த மாதிரி உதவலாம் என்பதுதான் அவரது ஒரே சிந்தனையாக இருக்கும்.

அடுத்தவருக்கு அவர் உதவுவதற்கு அளவே இருக்காது. பாரபட்சம் பார்க்காமல், பேதம் பார்க்காமல் உதவுவார். மற்றவர்களை மதிப்பதிலும் அவருக்கு நிகர் யாருமில்லை. அதேபோல மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார் என்றார்.

அன்புமணி கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டது முதல் அங்குள்ள கைதிகளுக்கு கல்வி போதனையூட்டுவதிலும், கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதிலும்தான் அறிவு ஈடுபட்டுள்ளார். நாங்கள் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வா என்று மட்டும்தான் கேட்பார். அந்தப் புத்தகங்களை கைதிகளுக்குக் கொடுத்து படிக்க வைப்பார். தானே சொல்லியும் கொடுப்பார். பல கைதிகள் இவரிடம் படித்து தேர்வு எழுதி பட்டங்களும் வாங்கியுள்ளனர் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றார் கண்களில் கண்ணீர் மல்க.

மூவரையும் காக்க தமிழ் ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சென்னை: 21 வருடங்களாக சிறையில் வாடி வரும் நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது நியாயமில்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி பல்வேறு அமைப்புகள், கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாக இன்றைய உயர்நீதிமன்ற உத்தரவும், முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் தீர்மானத்திற்கும் காரணம் என்று பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலத்தில் இதுபோன்ற ஒரு பரபரப்பான சூழலை மக்கள் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ் ஆர்வலர்கள் மிகப் பெரிய அளவில் பொங்கி எழுந்து நடத்திய போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் அத்தனை பேரையும் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளி விட்டது மறுக்க முடியாத உண்மை.

அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து விட்டன. அதிலும் சென்னையில் பெண் வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் தொடங்கி, நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்தான் அனைவரையும் உசுப்பி விட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், வக்கீல்கள், அரசியல் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர்.

கோவையில் நேற்று மாணவர்கள் நடத்திய மிகப் பெரிய போராட்டம் கோவை ரயில் நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பல மாவட்டங்களில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பை மேற்கொண்டதால் கோர்ட் பணிகள் முடங்கின. பல பகுகதிளில் மறியல்கள் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு செயலிழந்தது.

தலைநகர் சென்னையிலும் போராட்டங்கள் படு சூடாக நடந்து வந்தன. எப்படி அன்னா ஹஸாரே போராட்டத்தால் வட இந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவியதோ அதேபோன்றதொரு பரபரப்பும், பதட்டமும் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு அலை எழும்பியதன் காரணமாகவே, நேற்று என்னால் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதாக கூறிய முதல்வர் ஜெயலலிதா, இன்று ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் மூவரின் உயிரைக் காக்க நடந்து வரும் போராட்டத்தில் இது முதல் வெற்றியாக தமிழ் ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பினர், வக்கீல்கள் கூறியுள்ளனர்.

இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன் மகள் அரித்ரா

லண்டன்: எனது தந்தை உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் முருகனின் மகள் அரித்ரா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக பாடுபட்ட, போராடிய அனைவருக்கும் எனது மிகப் பெரிய நன்றிகள். மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.

ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு இந்த உத்தரவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனது பெற்றோர் தவறு செய்யாதவர்கள், அவர்கள் அப்பாவிகள். இந்த உத்தரவு எனக்கு மிகப் பெரியது, மதிப்பு மிக்கது என்றார் அரித்ரா.

எனக்கு நம்பிக்கை கொடுத்த ஜெயலலிதாவுக்கும், அனைவருக்கும் நன்றி- பேரறிவாளன் தாயார்

சென்னை: என் பிள்ளை கிடைப்பானோ, மாட்டானோ என்று செத்துப் பிழைத்து வந்த எனக்கு அம்மா ஜெயலலிதா நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கும், எனது மகனுக்காகப் போராடி வரும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பிள்ளை கிடைப்பானோ, இல்லையோ என்று தினசரி செத்துப் பிழைத்து வந்தேன். ஆனால் இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி எனக்குப் பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளார் அம்மா.

இதன் மூலம் எனக்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இதற்காக அம்மாவுக்கும், போராடிய அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் தழுதழுத்த குரலில்.

11 வருட தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்

சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.

ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை தூக்கில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.

இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.

இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வைகோவுக்காக ஆஜரானேன்-நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: ஜேத்மலானி

நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்குப் பி்ன்னர் வெளியே வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் இங்கு நிற்க முதல் காரணம் வைகோதான். அவர் எனது நெருங்கிய நண்பர். அவருக்காகத்தான் வந்தேன். இன்று இங்கு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நிச்சயம் நீதி சாகாது என்றார் ராம்ஜேத்மலானி.

ஜேத்மலானியால்தான் இது முடிந்தது-வைகோ

வழக்கறிஞர் உடையில் வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் ராம்ஜேத்மலானிதான். அவருடைய திறமையான வாதத்தால்தான் இன்று இந்த இடைக்கலாத் தடையை பெற முடிந்தது. நிச்சயம் வெல்வோம் என்றார்.

மூவரும் விடுதலையாகும் வரை போராட்டம் ஓயாது - பழ. நெடுமாறன்


முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆ‌கியோ‌‌‌ர் ‌விடுதலையாகு‌ம் வரை போரா‌ட்ட‌‌ம் ஓயாது எ‌ன்று இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த் தலைவ‌ர் பழ.நெடுமாற‌ன் கூ‌றினா‌ர்.

மு‌ன்னா‌ள் ‌‌பிரதம‌ர் ரா‌ஜி‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆ‌கியோ‌‌ரு‌க்கு தூக்குத் தண்டனை ‌நிறைவே‌ற்ற செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌‌தி‌த்தது.

இ‌ந்த தீர்ப்பு வந்ததை அடுத்து பழ.நெடுமாறன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல்இ மூவரின் மரண தண்டனைக்கு இடைக்காலத்தடையை நீதிமன்ற‌ம் வழங்கியிருக்கிறது. 20 ஆண்டு காலமாக நாம் தொடர்ந்து நடத்தி வரும் இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

சட்‌ட‌ப்பேரவை‌யிலு‌ம் இ‌ன்று மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் தொடர்ந்து மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும் என்று வேண்டுக் கொள்கிறேன்.

இந்த மூவரும் விடுதலையாகும் வரை நம்முடையை போராட்டம் ஓயாதுஇ ஓயாதுஇ ஓயாது எ‌ன்றா‌ர் பழ.நெடுமாற‌ன்.

3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவு‌ம் - ச‌ட்ட‌ப் பேரவையில் தீர்மானம்


ராஜீவ் கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமை‌ச்சர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன்இ சாந்தன்இ முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குடியரசு‌த் தலைவ‌ரை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது அவர் கூறுகை‌யி‌ல்இ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 72ன்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சா‌ற்றப்பட்ட பேரறிவாளன்இ சாந்தன்இ முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து குடியரசு தலைவர் நிராகரித்த சூழ்நிலை குறித்தும் இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சரான எனக்கு உள்ள அதிகாரம் சட்ட‌ப்பேரவை‌யி‌ல் 110வது விதியின் கீழ் விளக்கமாக அறிவித்தேன்.

3 பேரின் கருணை மனுவை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு இதில் நடவடிக்கை எடு‌க்க முடியாது என்றும் கூறி இருந்தேன். இந்த விஷயத்தில் மீண்டும் குடியரசு தலைவர்தான் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினேன்.

3 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையால் தமிழக மக்கள் இடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் வருத்தம் அடைந்தது பற்றியும் எனது கவனத்துக்கு வந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும்இ தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையிலும்இ பேரறிவாளன்இ சாந்தன்இ முருகன் ஆகியோரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயலலிதா கூறினார்.

இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌னை தூ‌க்‌கி‌ல் போட 8 வார‌ம் தடை ‌வி‌‌‌‌தி‌த்தது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்


மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ‌ரா‌‌ஜி‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோரு‌க்கு தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் 8 வார கால‌ம் இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரின் சார்பில் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இ‌ந்த மனுக்களில், 1991இல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு‌த் தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12ஆம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வரும் 9ஆம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு‌த் தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்தரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது. ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் 3 பேரும் தங்கள் மனுக்களில் வலியுறுத்‌தி இரு‌ந்தன‌ர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று நடைபெற உள்ளது. அ‌ப்போது, மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வழ‌க்க‌றிஞ‌ர்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினா‌ர்க‌ள்.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌‌ன் வாத‌த்தை‌த் தொட‌ர்‌ந்து, பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌‌‌ரு‌க்கு தூ‌க்கு‌த் த‌ண்டனை‌ ‌நிறைவே‌ற்ற ‌நீ‌திப‌திக‌ள் 8 வார‌‌ம் கால இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்தன‌ர்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை!

3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் !
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் மர‌ண த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌றிவாள‌‌ன், முருக‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் த‌ண்டனையை ர‌த்து‌ செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌பிரபல வழ‌க்க‌றிஞ‌ர் ''தடா'' சந்திரசேகர் இந்த மனுக்களை இ‌ன்று தாக்கல் செய்தார். அ‌ப்போது, மனுக்கள் மீது அவசரம் கருதி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று சந்திரசேகர் கேட்டுக் கொண்டார்.

இதை ஏ‌ற்று‌‌‌க் கொ‌ண்ட நீதிபதி பால்.வசந்தகுமார், நாளை விசாரணை தொடங்கும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை முதல் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடைபெற உள்ளது. இதில் ‌பிரபல மூ‌த்த வழ‌க்க‌றிஞ‌ர் ராம்ஜெத்மலானி ஆஜரா‌கி வாதாடு‌கிறா‌ர்.

பேர‌றிவாள‌‌ன், முருக‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் சா‌ர்‌பி‌ல் மு‌ம்பையை சே‌ர்‌ந்த ‌பிரபல வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் யுக்முகுக் வாகித் சவுத்திரி, காலின் கான்சிலிஸ் ஆகிய வாதாடு‌கிறா‌ர்க‌ள்.

பேரறிவாளன் சாந்தன் முருகன் உயிர்காக்க இன்றைய முக்கிய செய்திகள்மூவரை காக்க மக்கள் மன்ற பெண் தோழர் செங்கொடி தீக்குளித்து மரணம்
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
காஞ்சி மக்கள் மன்ற தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்
28.08.2011 மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.
00000


3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி கோவை‌யி‌ல் இர‌யி‌ல் ம‌றிய‌ல் 660 பே‌ர் கைது
பேர‌றிவாள‌‌ன் முருக‌ன் சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் தூ‌க்கு‌‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி கோவை‌யி‌ல் நட‌ந்த இர‌யி‌ல் ‌ம‌றிய‌லி‌ல் 660 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
3 பேரு‌க்கு வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி தூ‌க்கு‌த் ‌த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட உ‌ள்ள ‌நிலை‌யி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் போரா‌ட்ட‌ங்க‌ள் இர‌யி‌ல் ம‌றிய‌ல் ம‌‌னித ச‌ங்‌கி‌லி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வகை‌யி‌ல் நடைபெ‌ற்று வரு‌கி‌ன்றன.
கோவை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த இர‌யி‌ல் ம‌றியல‌் போரா‌ட்ட‌த்‌தில‌் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌‌ள் பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌ம் நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க‌ம் ம.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் ப‌‌ங்கே‌ற்றன‌ர். இ‌ந்த இர‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட 660 பே‌ர்‌ கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டன‌ர்.
0000
4 வது நாளாக பெண் வழ‌க்க‌றிஞ‌ர்கள் உண்ணாவிரதம்முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் 4வது நாளாக பெண் வழ‌க்க‌றிஞ‌ர்கள் 3 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே இ‌ன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

இவ‌ர்களு‌க்கு அ‌ர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌‌ள், நடிக‌ர்க‌ள், இய‌க்குந‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு தர‌ப்‌பி‌ல் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
0000
யாரு‌ம் உ‌யிரை மா‌ய்‌க்க வேண்டாம் - பழ.நெடுமாறன்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக யாரும் முரணான செயலில் ஈடுபட வேண்டாம் என்று 3 தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம்பெண் தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
முதலமை‌ச்சரிடம் முறையிடுவது, நீதிமன்றத்தில் வாதாடுவது, மக்களைத் திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்றுபட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களைக் காக்க முடியும்.
நாம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதைச் செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். 3 உயிர்களைக் காக்க தொடர்ந்து போராடுவதற்குப் பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென பழ.நெடுமாற‌ன் வேண்டி கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.
0000
சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் நான்கு பெண் வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர்
சேலம்: சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் பெண் வக்கீல்கள் நான்கு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் இவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் நான்கு பெண் வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வக்கீல்கள் தமயந்தி, கீதா, அறிவுமதி, பிரபா ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீஸார் கேட்டை மூ்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்ட நிலை உருவானது.

இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
0000
மூன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில்10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்
டெல்லி: வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு

இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
 

இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
0000

மரண தண்டனை ஒழிப்பு மாநாடு [காணொளி]


3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌‌ண்டனையை ‌நிறு‌த்த முதலமை‌ச்சரு‌க்கு அ‌திகார‌‌ம் இ‌ல்லை - ஜெயல‌லிதா


ரா‌ஜி‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் த‌‌ண்டனையை ‌நிறு‌த்த முதலமை‌ச்சரு‌க்கு இ‌ல்லை எ‌ன்று த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் 110வது விதியின் கீழ் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதா இ‌ன்று ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சா‌ற்றப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து குற்றம் சா‌ற்றப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதலஅமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதலமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


ஆனால் 2000ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.


அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.


தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.


எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.


இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்தவித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:


இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)ன்படி கட்டளையிடுகிறது.


இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்.


குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்குதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர்தான் எடுப்பார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.


இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று அ‌தி‌ல் கூறப்பட்டுள்ளது.


http://tamil.webdunia.com

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

28.08.2011 ஞாயிற்றுக்கிழமை:இன்றைய முக்கிய செய்திகள் 01தலைப்புப்செய்திகள்
000
மரணம் எங்களை வென்றால் தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும்;: பேரறிவாளன் வேண்;டுகோள்
0000
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்குத் கயிற்றில் இருந்து காப்பாற்றிவிடலாம் சட்டவாளர்கள் நம்பிக்கை
0000
அமைச்சர்களான  சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோரை சிறீலங்கா புலனாய்வுத்துறை கண்காணிக்கிறது
0000
அமெரிக்காவிடம் பணிகிறார் மகிந்த! கொழும்பு வரும் பிளேக்கை சந்திக்கவும் விருப்பம்
0000


சிங்கப்பூரில் நடைபெற்ற  அரசுத்தலைவர்  தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் டோனி டான் வெற்றி
0000


விரிவான செய்திகள்..
0000
ஒரு வேளை மரணம் எங்களை வென்று விட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான என்று பேரறிவாளன் உருக்கமாக கூறியுள்ளார்.

போலியாக  சித்திரிக்கப்பட்ட குற்றச்சாற்றுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றிக்கு பேரறிவாளன் அளித்துள்ள பேட்டியில்
தங்களுக்காக போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருப்பதாகவும்
அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் தங்களுக்காக போராடுவது தங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது என்று கூறியுள்ளார்

இன உணர்வு மட்டும் அல்லாது, மனித நேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்ட பேரறிவாளன்  அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் தங்களின் விடிவுக்கு வழி செய்வார என்றும் அவருடைய குரல் தங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத் தெரியும என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இப்போது தனக்கு ஆசையாக இருக்கிறது என்றும்  சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது என்றும் தங்களுக்காக போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்ப தோன்றுகிறது என்றும் ஏக்கத்தடன் கறிப்பிட்ட பேரறிவாளன்  ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒரு வேளை மரணம் தங்களை வென்று விட்டால், அந்தத் கயிற்றின் முன்னால் நின்று தான் சொல்ல நினைப்பது தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான் என்றும் கூறியுள்ளார்
00000

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரது உயிர்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று பேரறிவாளனின் தந்தை நம்பிக்கை குயில்தாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கருத்துரைத்த  குயில்தாசன் தனது மகன் உள்பட 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் அறிவித்துள்ள தகவலை கேட்டு மிகவும் வேதனையுடன் உள்ளதாகவம் அனைத்து கட்சி தலைவர்களும், மனித நேயம் உள்ளவர்களும், தமிழ் இன உணர்வு உள்ளவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் அனைவரும் ஒன்று திரண்டு
; நல்ல முடிவு எடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க உள்ளனர் என்றும்  தனக்கு தமிழக முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளதாகவம் .3 பேர் உயிர்களை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என தான் நம்புகிறேன் என்றும் கூறினார்
0000
இந்தியா, ஆசியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவரகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனித நாகரிகம் வளராத காலத்தில் தான் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பன போன்ற கொடிய தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. இன்றைய நிலையில் உலகில் 95 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. 49 நாடுகளில் குடி மக்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் போது காந்தி பிறந்த நாடு என்றும், நாகரீகத்தின் தொட்டில் என்றும் பெருமைப்பட்டு கொள்ளும் இந்தியாவில் மட்டும் தூக்கு தண்டனை தொடர்வது சரியானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர்

பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று 28ஆம் திகதி மாலை 3 மணிக்கு சென்னையை அடுத்த மறைமலைநகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்துவதாகவும் கொடிய மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்த மாநாட்டில் தமிழ் உணர்வாளர்கள், மனித நேயம் கொண்டவர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று ராமதாசும் திருமாவளவனும்  கேட்டுக்கொண்டுள்ளனர்
0000

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை செப்ரெம்பர் 9ம் திகதி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி உலகம் எங்குமுள்ள தமிழர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை தென்னாபிரிக்காவில் நிறவாதப் பிரிவினைக்கு எதிராகப் போராடிய உலகப் புகழ்பெற்ற செயற்பாட்டாளரான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிடும் தீர்மானத்தை இந்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மரண தண்டனை, கொலையை சட்டபூர்வமாக்குகிறது என்றும் சமுதாயத்தின் மனிதத் தன்மையைக் குறைவடையச் செய்கிறது என்றும் டெஸ்மண்ட் டூடூ தெரிவித்துள்ளார். 20 வருடங்களாக மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடும் மூவர் மீதும் மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை இந்திய அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை முன்னிறுத்தி ஃபேஸ்புக் சமூக இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஸ்டொப் டெத் பெனால்டி இன் இண்டியா என்ற வலைப்பக்கத்தில் இருக்கும் இந்திய குடியரசுத் தலைவருக்கான மனுவில் டெஸ்மண்ட் டூட்டூ தனது பெயரைச் சேர்த்துக்கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்.
000
இதேவேளை, இந்த வலைப்பக்க மனுவில் ஏற்கனவே உலகப் பிரசித்தி வாய்ந்த அரசியல் கோட்பாட்டாளரும் செயற்பாட்டாளருமான நோம் பேராசிரியர் சொம்ஸ்கி, எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ரோய் உள்ளடங்கலாக பல்வேறு கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், இதழியலாளர்கள் முதலானோர் தமது ஒப்பத்தை அளித்து வருகின்றனர். மரண தண்டனைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பும் அனைவரும் இந்தத் தளத்தில் தமது பெயரைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த எதிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த முடியும் என்று வலைப்பக்க நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
000
அரசியல் தலையீடு இல்லாமல் சட்டம் நீதியாக செயற்படுமாக இருந்தால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்குத் கயிற்றில் இருந்து காப்பாற்றிவிடலாம் என்று இந்திய மற்றம் உலக சட்ட வல்லுனர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒரு உயிரை பறித்ததற்காக கொடுக்கப்படும் தண்டனை இன்னொரு உயிரை பறிப்பது ஜனநாயக நடைமுறை அல்ல என்பதை பல நாடுகள் உணர்ந்து மரணதண்டனையை இரத்துச் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதி மன்றங்களில்  மீள்; முறையீடு செய்து உயிர் தப்பிய சிலரது வழக்குகளை உதாரணம் காட்டியுள்ளனர்

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப்சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தயா சிங்  என்பவர் 1972-ம் ஆண்டில் சிறையில் இருந்து தனது மரண தண்டனையை குறைக்குமாறு கோரி ஆளுநருக்கும், பிறகு குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தார். ஆனால் அவையாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 1991-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதினார்.

அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ். வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதேபோல் குஜராத்தில் திரிவேணி பென் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமற்றதா என்பதையும், அவ்வாறு காலதாமதம் ஆனதற்கு எந்த விதத்திலாவது குற்றவாளி பொறுப்பாளரா என்பதையும் மட்டுமே சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பளிக்கும் என்று கூறியுள்ளது.

இது மட்டுமின்றி 1983ல் , தமிழ் நாட்டு மக்களிடையே நன்கு அறிமுகமான விஷ ஊசி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாததால் அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்ததையும் சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
00000
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றோரையும், அரசுக்கு ஆதரவளிக்கும் சில அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் சிறிலங்காவின் அரச புலனாய்வுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோருடன் சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மையில் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரரும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்களினதும், தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்புகளினதும் பேரணிகள், கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகள் குறித்தும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு சிறிலங்கா அரச உயர்மட்டமே அரச புலனாய்வுத்துறைக்கு  பணித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

அரசாங்கத் தரப்பில் இருந்தாலும், இவர்களின் உரைகள் மற்றும் செயற்பாடுகளால் சிறிலங்கா அரசுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கண்காணிக்கப்படுவது குறித்து தாம் அறிந்திருப்பதாக தேசப்பற்று தேசிய முன்னணியின் பொதுச்செயலர் வசந்த பண்டார கொழும்பு வாரஇதழிடம் கூறியுள்ளார்.

தமது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறியுள்ள அவர், தாம் சிறிலங்கா அரசுடன் எல்லா விடயங்களிலும் முரண்படவில்லை என்றும் ஒரு சில விடயங்களில் மட்டுமே முரண்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0000

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புச் செய்திகள்  தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நாளை கொழும்பு வரும் றொபேட் ஓ பிளேக்கிடம் இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த முறை கொழும்புக்கு வந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்கை சந்திக்க மறுத்த  சிறிலங்காவின்  அரசுத்தலைவர் ; மகிந்த ராஜபக்சவை இம்முறை அவரை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார்

இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிளேக்கைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்தள்ளது

அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது சற்று இறங்கிப் போக முடிவு செய்துள்ளதையே இது வெளிப்படுத்துவதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
0000

திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைப்பது தொடர்பான உடன்பாடு இந்திய- சிறிலங்கா அரசுகளுக்கு இடையில் செப்ரெம்பர் 5ம் திகதி  கையெழுத்திடப்படவுள்ளது.

சிறிலங்கா மின்சாரசபை அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

500 மில்லியன் டொலர் செலவில் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல்மின் நிலையத்தை இந்தியா நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் 283 கி.மீ நீளமாக உயர் அழுத்த மின்கடத்திப் பாதையும் அமைக்கப்படவுள்ளது.

சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதால்இ சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த போதும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதி வழங்கியுள்ளதாகவும் சிறிலங்கா மின்சாரசபை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
0000

இந்தியாவின் பெங்களுர் நகரில் சிறிலங்கா அரசாங்கம் புதிய தூதரகப் பணியகம் ஒன்றைத் திறந்துள்ளது.

இரு நாடுகளுக்களுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு இந்த புதிய தூதரகப் பணியகம் உதவும் என்று இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெங்களுர்  நகரில் உள்ள சிறிலங்கா தூதரகப் பணியகத்தின் பிரதம அதிகாரியாக சுதாகர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

00000
இந்தியாவிற்கு யாத்திரை சென்ற மூன்று இலங்கையர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த  நபர்கள் காணாமல் போயுள்ளதாக இந்தியாவிற்கான சிறீலங்கா  உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மூன்று வௌ;வேறு யாத்திரை குழுக்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

தெனியா, அல்பிட்டி மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை  கண்டு பிடிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவிற்கான சிறீலங்கா  உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
0000

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆத்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கே . ரோசைய்யா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரிஜித் சிங் பார்னாலாவுக்கு பதிலாக இந்திய ஜனாதிபதி பீரதீபா பாட்டேலினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

முதலமைச்சர் வை.எஸ்.ராஜ்சேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக 2009 ஆம் ஆண்டு ரோசைய்யா நியமிக்கப்பட்டிருந்தார்.

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை ஆத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக ரோசைய்யா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
0000
மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது என தமிழர் அமைப்புக்கள் முடிவு எடுத்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு குடியரசுத்தலைவர்களும்  நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் வாதாடவுள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.இந்த மனுமீது ராம் ஜெத்மலானி எதிர் வரும் திங்கட்கிழமை முன்நின்று வாதிடுவார் எனத் தெரிகிறது.
0000

சிங்கப்பூரில் நடைபெற்ற  அரசுத்தலைவர்  தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் டோனி டான் வெற்றிபெற்றுள்ளார்.. நான்குமுனைப்போட்டி நிலவிய இந்தத் தேர்தலில். ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட டொக்டர் டோனி டான் 7, 269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டோனி டான் சிங்கப்பூரின் ஏழாவது அரசுத்தலைவராக  பதவி ஏற்க உள்ளார்
.முன்னதாக அரசுத்தலைவர்  பதவி வகித்து வந்த நாதனின் பதவிக்காலம் முடிவடைந்ததைஅடுத்து அங்குதேர்தல் நடைபெற்றது. புதிய அதிபர் எதிர்வரும் 1-ம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
0000

0000
லிபியா தலைநகர் டிரிபோலியில், அமைதி திரும்பியுள்ள நிலையில், நகரின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பிணங்கள் குவிந்து கிடப்பதால், சுகாதாரம் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
இன்று அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க, வழிவகை செய்யப்படும் என்று லிபிய தேசிய இடைக்காலக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர், மகமூத் ஷம்மாம் உறுதியளித்துள்ளார்
இதேவேளை டிரிபோலி மக்களுக்கு, பல்வேறு வகைகளிலும் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடாபி எங்கிருக்கிறார் என்பது, இன்னும் தெரியவராத நிலையில், அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ' தங்களைப் பொருத்தவரை, அவர் கதை முடிந்து விட்டது  என்றும் அவரையும் அவரது மகன்மாரையும்  கைதுசெய்யும்  வரை, எல்லாக் காரியங்களையும் தள்ளிப் போட முடியாது' என்றும் லிபிய தேசிய இடைக்காலக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஷம்மாம் தெரிவித்தார்.
டிரிபோலி தற்போது அமைதிக்குத் திரும்பியுள்ள நிலையில், கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரில், கடாபி ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக, இடைக்கால அரசின் சார்பில், அங்குள்ள பழங்குடியினத் தலைவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள். தோல்வி அடைந்துள்ளன
0000

சிரியாவிலுள்ள பொதுமக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அங்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் ஆரம்பித்த பின்னர் முதல்முறையாக ஐக்கிய நாடுகளின் குழுவினரை நாட்டுக்குள் பிரவேசிக்க சிரிய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் நாடளாவிய ரீதியில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படவில்லை என குறித்த குழுவினர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் முதல் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டாயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே கூறியிருந்தது.
0000
00000
அல்கெய்தா அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவரான அதியா அப்த் அல் ரகுமான் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் பாகிஸ்தானில் அல்கெய்தா அமைப்பின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்ட பிறகு அவ்வமைப் பின் தலைவராக அல் ரகுமான் பதவி ஏற்றிருந்தார்
லிபியாவை சேர்ந்த இவர் ஆப் கானிஸ்தானில் ரஷ்ய படைகளுக்கு எதிராக அல்கெய்தா போரிட்ட காலகட்டங்களில் அந்த அமைபப்pல்  இணைந்து பின்லாடனின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார்.
கடந்த22-ம் திகதி ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாஷிரிஸ்தான் மலைப் பகுதியில் அல் ரகுமான் பதுங்கியிருந்த போது கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் கொல்லப்பட்ட விதம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை.
0000
தொடர்வது விளையாட்டுச் செய்திகள்
000
ஆமெரிக்காவின் நியூ ஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு டென்மார்க்கின் வோஸ்னியாக்கி முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூஹேவன் நகரில் நடக்கும் ; பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதியில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, இத்தாலியின் பிரான்சிஸ்காவை சந்தித்தார். இதில் வோஸ்னியாக்கி 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு  முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் ; செக்குடியரசின் பெட்ரா செட்கோவ்ஸ்காவுடன் மோத உள்ளார்.
0000
 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி தோல்வியடைந்தது வியப்பாக உள்ளது,'' என்று, ஓஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால் இந்திய அணி, சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
குறித்து கருத்து வெளியிட்ட பிரட் லீ
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி முழுமையாக தோல்வியடைந்தது ஆச்சரியமானது என்றும்  இந்தத் தோல்வி இந்திய அணியை காயப்படுத்தி இருக்கும் என்று தெரியும என்றும் கூறினார்
வேகம் மற்றும் சுவிங்கிற்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்திலுள்ள ஆடுகளங்களில் விளையாடுவது மிகவும் கடினம் என்று குறிப்பிட்ட  பிரட் லீ கடந்த 2005 ஆஷஸ் தொடரின் போது இதே அனுபவம் தான் ஒஸ்ரேலிய அணிக்கும்  ஏற்பட்டது என்றும்  இதனால் தான் அந்த தொடரில் தாங்கள் தோற்க நேரிட்டது என்றும் தெரிவித்தார்
00000


சனி, 27 ஆகஸ்ட், 2011

மூவர் உயிர் காக்க - ​​வை​கோ

இன்றைய முக்கிய செய்திகள்


இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் நேற்று அதிகார பூர்வமாக தெரிவித்தனர்.


இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தமிழகத்தில் தொடங்கியுள்ள போராட்டம் உலக மெங்கும் தீவிரமடைந்து வருகிறது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன. 


தமிழக முதல்வரால் மட்டுமே மூவரின் உயிரையும் காப்பற்ற முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 


இந்தத் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இதுகுறித்து தமிழக அரசிடம் மனு ஒன்றை அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதே கோரிக்கையை ராமதாஸ் உள்ளிட்ட இன்னபிற அரசியல் தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.


பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இணைந்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 


தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


சமூக வலைத்தளங்களில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் தூக்கு தண்டனைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர்.


''Stop Death Penalty in India'    என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில், சமூக ஆர்வலர்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர். 


சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 


அதேபோல், டிவிட்டரிலும் #stopdeathpenalty என்ற பெயரில் பலரும் தங்களது எண்ணங்களை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.


0000


மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது என தமிழர் அமைப்புக்கள் முடிவு எடுத்துள்ளன.


கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு குடியரசுத்தலைவர்களும்  நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் வாதாடவுள்ளார்.


இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.இந்த மனுமீது ராம் ஜெத்மலானி எதிர் வரும் திங்கட்கிழமை முன்நின்று வாதிடுவார் எனத் தெரிகிறது.
0000
 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று தொடரூந்து மறியலில் ஈடுபட்டனர்.இதனால் இந்தத் தடத்திலான தொடரூந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன:


அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்; ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர்.


இவற்றை விட தமிழகத்தின் பல் வேறு நகரங்களிலும் கண்டன பேரணிகள் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளன
000
இதேவேளை நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுக்க அதிரடி ப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் திவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சிறீலங்கா  அரசு நிறுவனங்கள் தூதரகம், வங்கி, பௌத்த மடாலயம், உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படையினர்  நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சிறையைச் சுற்றி அதிரடிப்படை பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் சிறையதிகாரிகளும் சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரியும் வேலூரில் முகாமிட்டு சிறையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. 

00000
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.


நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது, குடியரசுத் தலைவரை சந்திக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா? என்று செய்தியாகர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், எந்த வித முயற்சியும் செய்யவில்லை என்றார்.


டெல்லியில் எந்த தலைவர்களை சந்தித்து பேசினீர்கள் என்ற கேள்விக்கு, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான பரதன், ராஜா மற்றும் வைகோ ஆகியோரை சந்தித்து பேசியதாகவும் 3 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் கூறினார்


3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற கோரி தமிழக முதலமைச்சரிடம் மனு தந்து உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அற்புதம்மாள், ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு தந்து உள்ளதாகவம்  அவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நேரில் கோரிக்கை வைப்பேன் என்றும் தெரிவித்தார்
0000


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, தமிழகத்தில் மாணவர்களை திரட்டி போராடுவோம் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.


இதுகுறித்து நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்  
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் 


இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகாத நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம் என்றும்  ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்


இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும என்றும் குறிப்பிட்ட இயக்குனர் பாரதிராஜா தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். என்றும் இதுதொடர்பாக, தாங்கள் முதல்வரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்


00000
இதேவேளை பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கருத்துரைத்த வேலூர் மத்திய சிறை அதிகாரி 
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு வந்துவிட்டதால், இனி அவர்கள் மூன்று பேரும் முன்பு போல் சிறைக்குள் தாராளமாக நடமாட முடியாது என்றும் நூலகத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


அவர்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், காவலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அந்த அதிகாரி, தூக்குத் தண்டனை கைதிகள் மூன்று பேரையும் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
0000
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெற்றது
இந்தத்திருவிழாவுக்காக காலை 7 மணிமுதலே பக்தர்கள் அலைமோதத் தொடங்கியிருந்தனர்.தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிறீலங்காவில் இருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்
(விடியோ)

0000
சிறிலங்கா அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா மீது விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


அலரிமாளிகையில் நேற்று சிறிலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த 14 முன்னாள் நீதிபதிகள், சரத் என் சில்வா தலைமை நீதியரசராக பதவி வகித்த காலத்தில் தாம் முறையற்ற விதத்தில் ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர். 


இதையடுத்தே சரத் என் சில்வா மீது விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததுடன் சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.


அத்துடன் சிறிலங்கா அரசின் ஊழல்களை வெளிக் கொண்டு வரும் இணையத் தளம் ஒன்றையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் அவர் கடந்தவாரம் கலந்து கொண்டிருந்தார். 


இந்தநிலையிலேயே சரத் என் சில்வாவுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. 


ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலரை சிறிலங்கா அதிபரிடம் முறையிடச் செய்து அவர் மீது விசாரணைக் குழுவொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
00000
நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன.
உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்ட போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.


இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.


இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன. இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
0000
சிறீலங்காவில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக  'அவசரகால விளைவு விதிகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.


புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அச்சட்டமூலத்தை வரையும் நடவடிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.


அதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டமும் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
யுத்தத்தம் செய்ததை விட சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தவது மிகவும் சவால் மிக்கது என்று சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தை விடவும், சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்துவது கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய ஊடக வலையமைப்பு, பெரிய நாடுகள் பில்லியன் கணக்கான வளங்களைக் கொண்ட சர்வதேச சமூகம், இலங்கை விவகாரத்தில் திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவிலான வளங்களையும் சக்திவாய்ந்த ஊடக வலையமைப்புக்களையும் எதிர்கொள்வது சிறீலங்கா போன்ற சிறிய நாடொன்றுக்கு சவால் மிகுந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இணையதளம், அச்சு ஊடகம், ஓவியங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களைப் பயன்படுத்தி சிறீலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெல்ல முடியாத யுத்தத்தை வெற்றி காணுதல் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0000
இலங்கையில் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் தான் மேற்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 அடுத்த மாதம் 17-ம் திகதி இரண்டுநாள் பயணமாக இலங்கை செல்வதாக அவர் அறிவித்திருந்தார். 
 ஆனால், நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தவிர்க்க முடியாத சில சொந்த காரணங்களால் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்து விட்டதாக சுஷ்மா தெரிவித்தார்.
 மத்திய அரசு சார்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் செல்வீர்களா என்ற கேள்விக்கு அது குறித்து இன்னும் எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
0000


தமிழர்கள் அழுக்கானவர்கள், அசுத்தமானவர்கள் என்ற ரீதியில் பேசி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க துணைத் தூதர் மௌரீன் சாவ் சென்னையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளார்.
வெகுவிரைவில் சென்னையில் தனது பதவியில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
0000
000
ஐரின் சூறாவளியை எதிர்பார்த்து அமெரிக்காவின் கிழக்குகரையோரமாக வட கரோலினாவிலிருந்து நியூயோர்க் வரை அவசரகால  நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அத்லாந்திக்கிலிருந்து வந்த முதலாவது
சூறாவளி பலவீனமடைந்து பின்னர் மணிக்கு 110 மைல் வேகத்தில் வீசுகின்ற புயலாகமாறியது.
டெலவாரே, மேரிலாந்து, நியூஜேர்சி, மற்றும் வட கரோலினா ஆகிய பகுதிகளிலிருந்துமக்களை வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஐரின் சூறாவளி கரிபியனில் பகுதியில் சேதத்தை ஏற்படுத்திய பின்னர் பஹாமாஸிலிருந்து விலகிச்செல்கின்றது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் ஐரின் சூறாவளி தாக்கும் அபாயத்தில் உள்ள வடகரோலினாவில் அவசரகால நிலையை அதிபர்  பராக் ஒபாமா பிரகடப்படுத்தினார்.
வொஷிங்டனிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதன்காரணமாக அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த
மார்டடின் லூதர் கிங்கின் நினைவுச்சின்னத்திறப்பு நிகழ்வு செப்டம்பர்
மாதத்திற்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அதிபர் ஒபாமா
பங்குபற்றவிருந்தார்.
000
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசின் கல்விக்கொள்கை, பொருளாதார மாற்றம் மற்றும் தொழிலாளர் கொள்கைளை கண்டித்து நேற்று நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரம் பேர் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தேசிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தில்  கலந்துகொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையே நடந்த மோதலில் 26 பேர் காயம் அடைந்தனர்.


போராட்டக்காரர்கள் பல லட்சம் பேர் திரண்டாலும் அரசு தரப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. நாடு தமழுவிய அளவில் நடந்த போராட்டத்தில் 210 பேர் கைது செய்யப்பட்டார்கள்.


இதில் தலைநகர் சான்டியாகோவில் அதிகபட்சமாக 140 பேரை காவல்துறையினர்; கைது செய்தனர். 
நாடு முழுவதும் 51 இடங்களில் எதிர்ப்பு பேரணி நடந்தது. இதில் 8 இடங்களில் வன்முறை ஏற்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
000
ஒஸ்ரேலியாவில் கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்கள் 72 பேரின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
ஒஸ்ரேலியாவில் 4 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கல்லூரிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரியும் மாணவர்களை ஒஸ்திரேலிய அரசு கண்டுபிடித்து அவர்களது விசாக்களை ரத்து செய்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சரிவர செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 159 மாணவர்கள் அதிக அளவில் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.


இதில் 72 பேர் இந்திய மாணவர்கள். இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


0000
கூகுள் நிறுவனம் ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு தனது தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் தொலைக்காட்சியை பார்வையாளர்கள் செய்மதி வழியாகவும்  இணையதளம் மூலமும்  பார்க்கலாம் என அறிவிக்ப்பட்டுள்ளது அமெரிக்காவில் இந்த கூகுள் தொலைக்காட்சி எதிர்வரும் அக்டோபர் மாத ஆரம்பிக்கப்பட உள்ளது
000
இந்தியாவில் தங்கம், விலையில்  இன்றும் அதிரடியான ஏற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு.696ரூபா  அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 2612 ரூபா .ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 27940ரூ. ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம்.20896 ரூபாவுக்கு விற்பனையாகியது. 
இதேவேளை கொழும்பில் 24 கரட் தங்கம், 52 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 52 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து  300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் காசொன்றின் விலை 52 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது
0000