சனி, 20 ஆகஸ்ட், 2011

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு 01


சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, உலகளாவிய வேலைத் திட்டங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முன்வைத்துள்ளது.

தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இனத்தின் உறுதியான இருப்பை நிலைநிறுத்தவும் வேண்டிய, எட்டு அடிப்படை குறிக்கோள்களை மையப்படுத்தி, உலகளாவிய வேலைத் திட்டங்களாக இவை முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சரின் ; செயலகத்தினால் உலக தமிழர்களின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த உலகளாவிய வேலைத் திட்டங்களில் பங்கெடுத்து, சுநத்திர தமிழீழத்தை விரவுபடுத்தவும் , இனத்தின் இருப்பையும் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், ஆர்வமுள்ள அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரப்படுள்ளது.
இது தொடர்பாக  தலைமை அமைச்சரின்  செயலகத்தினால்; வெளியிடப்பட்டுள் செய்திக்குறிப்பில், ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பாடுபடுகின்ற அனைத்து அமைப்புக்களும், இந்த வேலைத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
தெற்காசியாவில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் வணிக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

'நியுசிலன்ட் ஹெரால்ட்' என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்காவின் இராணுவத் தலைமை விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக சிறிலங்காவைக் குறிப்பிட்டுள்ள 'நியுசிலன்ட் ஹெரால்ட்', அங்கு ஒரு மில்லியன் மக்களுக்கு 8000இற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப்படையினரை கொண்டுள்ள சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் 'நியுசிலன்ட் ஹெரால்ட்' குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் 22 அறைகளைக் கொண்ட விடுதி ஒன்றை சிறிலங்கா இராணுவம் நிர்வகித்து வருவதாகவும், படகுச்சேவைகள் மற்றும் திமிங்கலக் காட்சிப் பயணங்களை கடற்படை ஒழுங்கு செய்வதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதையும் 'நியுசிலன்ட் ஹரால்ட்' சுட்டிக்காட்டியுள்ளது
0000
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள 31 பேர் கொண்ட  நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவர் என்று இந்திய செய்தி நிறுவனமான பி.ரி.ஐ. தெரிவித்தது.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிலங்கா அரசு அறிவித்துள்ளதாகவுவம் பிரிஐ குறிப்பிட்டுள்ளது
0000
ஐ.நா நிபுணர்குழு அறிக்கை, சனல்-4 ஆவணப்படம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு சிறிலங்காவைத் தனிமைப்படுத்த முனையும் மேற்குலகின் இரட்டை வேடத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக சிங்களத் தேசியவாதியான கோமின் தயாசிறி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிக்க சிங்களத் தேசியவாத அமைப்புகளின் சார்பில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் கைதான சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்த மறுக்கின்ற பிரித்தானியா, நிபுணர்குழு அறிக்கையை வைத்துக் கொண்டும், சனல்-4 ஆவணப்படத்தை வைத்துக் கொண்டும் டிசம்பர் 31ம் நாளுக்குள் விசாரணை நடத்தத் தவறினால் அனைத்துலக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றியெல்லாம் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கண்டு கொள்ளாதிருப்பது குறித்தும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்லேடன் உள்ளிட்ட அல்கெய்தாவினரை அமெரிக்க சீல் படையினர் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்த்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா நிர்வாகம் இன்னமும் பதிலளிக்காத நிலையில்,சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா அழைப்பு விடுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0000
சிறீலங்காவில் தற்காலிகமாக வசித்துவந்த ஐந்து சீனப் பிரஜைகளுக்கு சிறிலங்கா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
வெள்ளவத்தையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் பணியாற்றிய சீனர் ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை மறைக்க முயற்சித்த ஐந்து சீனர்களுக்கே இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு சீனர் ஒருவரைக் கொலை செய்த ஐந்து சீனர்களும் அவரது சடலத்தை வாகனத்தில் எடுத்துச் சென்று கண்டியில் காட்டுப்பகுதி ஒன்றில் வீசியிருந்தனர்.
இரண்டு பொதிகளாக கட்டப்பட்டிருந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐந்து சீனர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிலேயே ஐந்து சீனர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள்  இருக்கும் நிலையில் இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பிலலை என்று கருதப்படுகிறது.
0000
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறதென நம்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  2010ம் ஆண்டுக்கான  அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக சிறீலங்கா அரசாங்கம் கூறிவருகின்றபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2010ம் ஆண்டு இலங்கையில் பாரிய தீவிரவாத செயல்கள் இடம்பெறாவிட்டாலும் தீவிரவாத செயல்களுக்கு பணம் மற்றும் உதவிகள் வழங்கியமை தொடர்பாக  அதிக தகவல்கள் வெளியானதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்காது செய்ய சிறீலங்கா  அரசாங்கம் எடுத்துள்ள வௌ;வேறு நடவடிக்கைகக்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக இராஜாங்க திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பணம் பெற்றுக்கொடுப்பதை நிறுத்த சிறீலங்கா அரசாங்கம் செயற்படும் ஒவ்வொரு விடயத்திற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் எனவும் அவ்வறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
0000
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக்கும் ஜெயலலிதாவின் திட்டத்தை எதிர்க்கவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி, புதிய தலைமைச்செயலக கட்டடத்தை மக்களுக்காக பயன்படுத்துவதை வரவேற்பதாகவம் சமம் என்ற வார்த்தையை பிடிக்காததால் சமச்சீர் கல்வி திட்டம், சமத்துவபுரம் போன்ற திட்டங்களை அ.தி.மு.க.,எதிர்க்கிறது என்றும் கூறினார்.
அரசியல் உள்நோக்கத்திற்காக பாடப்புத்தகத்தில் செம்மொழிப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
0000
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என்று மாற்றுவதற்கு அந்தமாநிலத்தின்  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பங்கா என அழைக்கப்படவுள்ளது
மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் வெஸ்ட் பெங்கால் என இருப்பதால்  அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருப்பதாகவும், இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுவந்தது. இதனால் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதற்கிணங்கவே அனைத்தக் கட்சிகளும் இணைந்து இந்தப் பெயர் மாற்றத்தை செய்வதற்கு தீர்மானித்துள்ளன.
பஸ்சிம் என்றால்  வங்க மொழியில் மேற்கு என்று பொருள். அதாவது இதுவரை ஆங்கிலத்தில் அழைத்து வந்த பெயரை தற்போது வங்க மொழியில் மாற்றியுள்ளனர். எனவே இதுவரை டபிள்யூ என்று ஆரம்பித்த இம்மாநிலத்தின் ஆங்கிலப் பெயர், இனி பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.
0000
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகும் திருநெல்வேலியில்  உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் பழைய பாடதிட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு தேர்வு எழுதும் 10-ம் வகுப்புக்கு கூட மெட்ரிகுலேஷன் கல்வித்திட்டத்தின் படி பாடம் நடத்துவதால் மாணவர்களும் பெற்றோர்களும்  சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகஅரசு, அனைத்து பள்ளிகளிலும் சமச்சிர் கலவித்திட்டத் கீழேயே பாடம் நடத்தம் படி அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
0000

பாகிஸ்தானில் நேற்று பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 43பேர் கொல்லப்பட்டதுடன் 117பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் ஜம்ரூட் நகருக்கு அருகில் உள்ள குந்தி என்ற கிராமத்தில் பள்ளிவாசலில் நேச்று வெள்ளிக்கிழமை யும்மா தொழுகைக்காக கூடியிருந்த மக்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கிராமம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பழங்குடியினர் வாழும் பகுதியாகும். இங்கு தலிபான் மற்றும் அல்கைதா இயக்கத்தினர் நடமாட்டம் அதிகம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை
00000
ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் அரசு தலைவர் லோரன்ஸ் பக்போ மீது பொருளாதாரத்தை பாதிக்கச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  நிதி மோசடிகள், ஆயுதக்கொள்ளை, உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அண்மையில் கைதுசெய்யப்பட்ட பக்போ தொடர்ந்தும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசு தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு  மறுப்புத்  தெரிவித்த பக்போ போராட்டங்களில் ஈடுபட்டதால் மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, தற்போதைய அரசு தலைவர்  அலசன் ஒட்டாராவினால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து லோரன் பக்போ கைதுசெய்யப்பட்டிருந்தார்.
00000

அமெரிக்காவையும் ஐரோப்பாவின் சில நாடுகளையும் பொருளாதார மந்தநிலை தாக்கப் போவதாக மோர்கன் அண்ட் ஸ்டான்லி நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தை 3ஏ என்ற அதி உச்ச நிலையிலிருந்து ஏஏ பிளஸ் என்ற நிலைக்கு ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்ததையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.
இந்நிலையில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பொருளாதாரத் தேக்க நிலை தாக்கப் போகிறது என்று மோர்கன் அண்ட் ஸ்டான்லி எச்சரித்துள்ளது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த எச்சரிக்கையால் வழக்கம்போல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடவே தங்கத்தின் விலை ஒரே இரவில் சர்வதேச அளவில் பெருமளவில் உயர்ந்துவிட்டது.
நேற்று அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ஆரம்பித்த அடி ஐரோப்பிய நாடுகள், ஒஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இன்று பரவியது. இந்தியப் பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் இன்று உணரப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் மந்த நிலை ஏற்பட்டால் அங்கு எரிபொருளுக்கான தேவை குறையலாம் என்ற அச்சத்தின் காரணமாக லண்டன் பங்குச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பரல் ஒன்றுக்கு 4 டொலர்கள் சரிந்துள்ளது. 00000
2011ம் ஆண்டின்;, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், சர்வதேச அளவில் தங்கம் விற்பனை, 2 லட்சத்து 250கோடி ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தங்க விற்பனை வளர்ச்சி கண்டு வருவதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் தங்கத்திற்கானதேவை அதிக அளவில் உள்ளது. இதனால், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், உலகளாவிய தங்கத்தின்தேவை, மதிப்பின் அடிப்படையில் சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 5 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால், அதன் பயன்பாடு, 17 சதவீதம் குறைந்து 919.80 தொன்னாக சரிவடைந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்திற்கானதேவை மதிப்பின் அடிப்படையின் முறையே, 38 மற்றும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.பல நாடுகளின் மத்திய வங்கிகள், நிதி இடர்பாடுகளை எதிர்கொள்ளக்கூடிய, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அவற்றை வாங்கி குவித்து வருகின்றன. சென்ற ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், இவ்வங்கிகள், முந்தைய ஆண்டு இதே காலத்தை விட, 4 மடங்கு அதிகமாக, அதாவது 69.4 தொன் தங்கத்தை வாங்கியுள்ளன.
0000
சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தடுப்பு மருந்துகள் சிலவற்றின் விலையைக் குறைத்துள்ளன.
தடுப்பூசி போடாததால் உலகளவில் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 இலட்சமாகும். வயிற்றோட்டம், நிமோனியா,காசநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்துகளை கொண்டு சேர்க்க இந்த விலை குறைப்பை செய்துள்ளதாக பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஜோன்ஸன் அன்ட் ஜோன்ஸன், கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், சனோஃபி ,அவெண்டிஸ் நிறுவனங்களே தங்கள் மருந்துகளின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளன.
0000
கொலம்பியாவில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிரேசில்-போர்ச்சுகல் அணிகள் முன்னேறியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை நடந்த அரையிறுதியில் பிரேசில்-மெக்சிகோ அணிகள் மோதின.
விறுவிறுப்பான அரையிறுதியின் முதல் பாதி முடிவு, கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் போர்ச்சுகல்-பிரான்ஸ் அணிகள் மோதின. இதில்  போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஏதிர்வரும் 21ம் திகதி நடக்கவுள்ள இறதிப் போட்டியில்  பிரேசில்-போர்த்துக்கல் அணிகள் மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி கண்ட பிரான்ஸ்-மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.
0000
அமெரிக்காவின் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி முன்னேறியது.
இந்த டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி, ஸ்பெயினின் ரபெல் நடால், மார்க் லோபஸ் ஜோடியை சந்தித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் பயஸ்-பூபதி ஜோடி, செக்குடியரசின் தோமஸ் பெர்டிச், ராடக் ஸ்டிபனக் ஜோடியை எதிர்கொள்கிறது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, அர்ஜென்டினாவின் யுயன் இக்னாசியோ செலா, யுயன் மோனாகோ ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா-குரேஷி ஜோடி 6-3, 5-7, 10-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் இந்திய-பாகிஸ்தான் ஜோடி, பிரான்சின் மைக்கேல் லாட்ரா, செர்பியாவின் நினாட் ஜிமோன்ஜிக் ஜோடியை எதிர்கொள்கிறது.
0000
ஒஸ்ரேலிய அணியின் தேர்வுக் குழுத்தலைவர் ஆன்ட்ரூ ஹில்டிச், முகாமையாளர்  கிரெக் சாப்பல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு ஆஷஸ் தொடரை, தொடர்ச்சியாக ஒஸ்ரேலிய அணி இழந்தது குறித்து விசாரிக்க ஆர்கஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில்  முன்னாள் வீரர்கள் ஆலன் போர்டர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பலர் இடம் பெற்றனர். 
இந்த குழு, கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 61 பேரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து  கிரிக்கெட் ஓஸ்திரேலியா பல அதிரடி முடிவுகள் எடுத்துள்ளது
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த கிரிக்கெட் ஓஸ்திரேலியாவின்  தலைவர் ஜாக் கிளார்க் 
இதுவரை வழக்கறிஞராக பணியில் இருந்து கொண்டே, தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்த ஆன்ட்ரூ ஹில்டிச், தேசிய செயல்திறன் முகாமையாளர் கிரெக் சாப்பல் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பதிலாக ஐந்து உறுப்பினர்கள், ஒரு தலைவர் கொண்ட தேர்வுக்குழு முழுநேரமும் செயல்படும் என்றும்  இது தவிர, இருவர் அணித் தேர்வுகுறித்து விஷயங்களில் சுதந்திரமாக இயங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்
அணியின் பயிற்சியாளர் நீல்சன், தலைவர் மைக்கேல் கிளார்க் இருவரும் தேர்வாளர்களாக செயல்படுவார்கள் என்றும் இவர்களது பணி இலங்கைத் தொடரில் இருந்து ஆரம்பிக்;கும் என்றும் கிரிக்கெட் ஓஸ்திரேலியாவின்  தலைவர் ஜாக் கிளார்க் தெரிவித்தார்
அணியின் திறனை அவ்வப்போது கண்காணிக்க, பொது மேலாளர் பதவி ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும்  இவர், அணித் தேர்வு, பயிற்சியாளர், திறன் மையத்தையும் மேற்பார்வையிடுவார் என்றும்  இந்த மாற்றங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும்  ஜாக் கிளார்க் கூறினார்.
000
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ஓவல் மைதானத்தின் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, இயன் பெல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அபாரமான இணைப்பாட்டத்தின் மூலம் இந்தியாவை நிலைகுலையச் செய்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் 3 விக்கட்டுகளை மாத்திரமே இழந்துள்ள இங்கிலாந்து 457 ஓட்டங்களை எடுத்துள்ளது. கெவின் பீட்டர்சன் 175 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பகுதி நேரப் பந்து வீச்சாளர் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இயன் பெல் ஆட்டமிழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: