திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை: திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக திமுக அறிவித்துள்ள போராட்டத்துக்கு, சென்னையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. சென்னையிலும் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கவுள்ளார். அதேபோல தென் சென்னை திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போராட்டங்களுக்கு காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. இங்கு யாரும் போராட்டம் நடத்தக் கூடாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி போராட்டம் நடத்தி மு.க.ஸ்டாலின் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பு நிலவுவதால் இரு இடங்களிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: