வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஏலியைபிடிக்க பூனை வளர்க்கலாம். பூனையை பிடிக்க என்ன செய்யலாம்?


ஏலியைபிடிக்க பூனை வளர்க்கலாம். பூனையை பிடிக்க என்ன செய்யலாம்? இது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கபடையினருக்கு ஏற்பட்டுள்ள கவலையாகும்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பூனைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது இந்த தூதரக வளாகத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட பூனைகள் சுற்றி வருகின்றன. இந்த பூனைகளின் இரவில் போடும் சகிக்க முடியாத சத்தம் மற்றும் சண்டையால் தூதரக அதிகாரிகள் குறிப்பாக பாதுகாப்பு படையினர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.பூனைகளின் சண்டை மற்றும் சகிக்க முடியாத சந்தத்தால் தூக்கத்தில் இருக்கும் படையினர் தலிபான்கள் தாக்குதல் நடத்த வந்து விட்டார்களோ என்று திடுக்கிட்டு எழுவதும் இந்தப் பூனைகளை விரட்ட முற்படும் படையினரை அவை பாய்ந்து பிராண்டி கடித்து காயப்படுத்தவதும் தொடர்கதையாகிவிட்டது
பூனைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து  இவற்றை ஒழிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்தப் பூனை ஒழிப்புக் குழு ,புதிய கருவிகளைப் பயன்படத்தி அவற்றை அச்சுறத்தி அவற்றை தூதரக வளாகத்தக்குள் வராமல் தடுக்க முற்பட்டது.ஆனால் தலிபான்களைப் போல இந்தப் பூனைகளும் அடங்கிப் போக மறுத்தன.அவை தலிபான்களிடம்; கெரில்லா தாக்குதல் முறையை கற்றுக் கொண்டனவோ என்னவோ அந்தப் பாணியில் அமெரிக்கப் படையினரை மறைந்திருந்து பாய்ந்து தாக்க துணிந்துவிட்டன.
பூனை கடிக்கு அமெரிக்காவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்யுமளவுக்கு நிலைமை மோசமடைந்ததைக் கண்ட பூனை ஒழிப்புக் குழு இந்தப் பூனைகளை சுட்டுக் கொலைவது என்று முடிவெடுத்து.
ஆமெரிக்காவின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனநாயக சிக்கல் இருந்ததைப் போல இந்தப் பூனை ஒழிப்பிலும் ஜனநாயகச் சிக்கல் வந்துவிட்டது
குடும்பத்தையெல்லாம் அமெரிக்காவில் விட்டு விட்டு தனியாக வசிக்கும் எங்களுக்கு இந்த பூனைகளால் தான் பொழுதுபோகிறது; அதனால் அவற்றை சுட்டுக் கொல்லக் கூடாது 'என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பூனை ஒழிப்பு நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது
அமெரிக்காவின் ஜனநாயக முரண்பாட்டை புரிந்துகொண்ட ஆப்கான்  பூனைகளை  முன்னரைவிட அதிகமாக,வாலாட்ட முற்பட்டதை அடுத்து  இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண, பூனை ஒழிப்பு குழு மீண்டும் கூடி விவாதித்தது. விவாதத்தின் முடிவில் 'பூனைகளின் அட்டகாசத்தை இனியும் தாங்க முடியாது. பூனை மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவற்றை பாதுகாப்பாக தங்கள் ஊருக்கு கப்பலில் எடுத்து செல்லட்டும். மீதமுள்ள பூனைகளை தூதரக வளாகத்தில் இருந்து விரைவில் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்தக் குழு தெரிவித்துள்ளது.
பூனைகளை ஒழிப்பதில் இவ்வளவு சிக்கலா? இந்தக் குழு சிறிலங்கா அரசிடம் அலோசனை கேட்டிருந்தால் பிரச்சனை ஒரே நாளிலை முடிஞ்சிருக்கும்.
புனைகளை ஒழிக்கும் போது ஓட்டுமொத்த பூனைகளையும் ஒழிக்க வேண்டும்;.ஒட்டுமொத்த புனைகளும் இருப்பதற்கு காரணம் ஆப்கான் மக்கள். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் ஒரு அணு குண்டைப் போட்டு அழித்தவிட்டால் பூனை தொல்லை இருக்காது.அதுக்கு பிறகு புனை இல்லாத ஆப்கான் நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என்று தங்களது அனுபவத்தை  சொல்லியிருப்பார்கள்

கருத்துகள் இல்லை: