ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்!


கொங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவுக்கு, என்ன நடந்தது? அவர் ஏன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார்? இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மீதும் மருத்துவ மனைகள் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்விகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஊடக வட்டாரங்களில் உலாவி வந்தன.
கொங்கிரஸ் கட்சி வட்டாரமும் சரி இந்திய மத்திய அரசு வட்டாரமும் சரி அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி மக்களுக்கு வாய் திறக்கமால் பரம இரகசியம் காத்து வந்தன.
இந்த நிலையில் அவருக்கு கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான, மெமோரியல் ஸ்லோன் - கெட்டரிங் கான்சர் சென்டர்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
சோனியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, மெமோரியல் ஸ்லோன் மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் படி  சோனியாவுக்கு கர்ப்பப் பை வாய் புற்றுநோய் (செர்விகல் கான்சர்) தொடர்பான பாதிப்பு, ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகவே, அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மருத்துவமனை நோயாளிகள் தொடர்பான பதிவேட்டில் கூட, அவரது பெயர் இடம் பெறவில்லை. வி.ஐ.பி., என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாவுக்கு;, இந்திய - அமெரிக்க மருத்தவரான  தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவர்கள் தான், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தத்தாத்ரேயுடு நூரி தற்போது நியூயோர்க்கில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும், கதிர்வீச்சு புத்தாக்கவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவரும், உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவருமான புலோக் சட்டர்ஜியே சோனியாவுக்கு, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். சட்டர்ஜியும், அவரது உதவியாளர் ருபேஸ் தலாலும், கடந்த வாரமே நியூயார்க்கிற்கு சென்று, சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
சோனியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்கள் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, இது தொடர்பான தகவல்களை, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், மிகவும் ரகசியமாக வைத்திருந்தது. அறுவை சிகிச்சையில் இருந்து, சோனியா குணமடைந்த பின், அதற்கு பின் ஒரு மாத காலம் வரை, அவர் ஓய்வெடுக்கக் கூடும் என தெரிகிறது. அப்போதும், அவர் சில தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வார். இதனால், நியூயார்க்கில் உள்ள, பிரபலமான தங்கும் விடுதி ; ஒன்றில், அனைத்து வசதிகளுடன் கூடிய அறையில் அவர் தங்க உள்ளார். அல்லது நியூயார்க்கில் உள்ள மருத்துவ பல்கலையில் அவர் தங்குவார். எனினும், அறுவை சிகிச்சைக்கு பின், சோனியாவுக்கு 'ரேடியஷன் தெரபி' தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து, மருத்துவமனை நிர்வாகம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் செய்தியின் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன வென்றால். அவருக்கு எற்பட்டுள்ள நோய் குறித்து அனுதாபப்படுபவர்களை விட மகிழ்ச்சியடைபவர்கள் அதிகமாக உள்ளதுதேயாகும். எந்த ஒரு தனிமனிதனும் துன்பத்தில் சிக்கும் போது சகமனிதன் அவனுக்காக இரங்குவதும் ஆறுதல் சொல்வதும்  உலக நியதி
அதிலும் அரசியல் தலைவர்கள் விடயத்தில் இந்த இரங்கல் இன்னும் அதிகமாக இருக்கும்.உதாரணமாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கோடிக்கணக்கான மக்கள் அவருக்காக இரக்கப்பட்டார்கள். அழுதார்கள்.பிரார்த்தனை செய்தார்கள்.ஆனால் அவருக்கு நோய்வந்ததற்காக சந்தோசப்பட்டவர்கள் மிகக் குறைவு.எண்ணிக்கை அளவில் பார்த்தால் கட்சி அரசியலில் அவருக்கு எதிர்தரப்பில் இருந்து ஒரு பத்தாயிரக்கணக்கானவர்கள் அவரது நோயையிட்டு சந்தோசப்பட்டிருக்கலாம்.
ஆனால் சோனியா விடயத்தில் இது கோடிக்கணக்கில் இருப்பது கவனிக்கத்தக்கது.அரசியல் சுயலாபத்துக்காக அனுதாபகம் காட்டுவதற்காக நடப்பவர்களுடைய நடிப்பை விட ஒருவருடைய நடவடிக்கையால் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்தவர்கள் வயிறெரிந்து கொடுக்கும் சாபம் வலியது என்பதை இது ஒரு மூடநம்பிக்கை என்று அவ்வளவு சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது.

கருத்துகள் இல்லை: