வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இலங்கை‌த் தமிழர்களுக்கு சம வாழ்வும் கிடைக்கும் வரை அரசு ஓயாது- ஜெயல‌லிதா

இலங்கை‌த் தமிழர்களுக்கு மறுவாழ்வும்இசிங்களர்களுக்கு இணையான சம வாழ்வும்கிடைக்கும் வரை என் தலைமையிலானஅரசு ஓயாது என்றும்இ தமிழர்களின்நியாயமான உரிமைகளை வென்றெடுக்கும்வரையிலும் தமது அரசு ராஜதந்திரநடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாகூறினார்.


சட்ட‌ப்பேரவையில் கடந்த 8.6.11 அன்றுஇலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒருதீர்மானத்தை இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கண்டித்திருந்தார். அவருடைய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்இன்று தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


இந்த தீர்மானத்தின் மீது பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க)இசௌந்தரராஜன் (சி.பி.எம்)இ குணசேகரன் (சி.பி.ஐ)இ டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)இ செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர்பேசின‌ர்.


இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகை‌யி‌ல்இ கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போதுஇலங்கை அரசு மனிதாபிமானஇ ஈவுஇரக்கமின்றி ராணுவ தாக்குதலைநடத்தியதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள். இதையொட்டிஎன்னுடைய தலைமையிலான அரசு இனப்படுகொலைகளை நடத்திய போர்க்குற்றவாளியாக இலங்கை அரசு அறிவிக்க ஐ.நா. மன்றத்தை இந்திய அரசுவற்புறுத்த வேண்டும் என்றும்இ இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும்இசமஉரிமையும் கிடைக்கிற வரையில் அந்நாட்டின் மீது மற்ற நாடுகளுடன்இணைந்து இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும்வலியுறுத்தி கடந்த 8.6.11ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.


தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலரான கோத்தபய ராஜபக்ச ஒரு தனியார்டி.வி.க்கு அளித்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.தாங்கள் செய்த தவறுகளைநியாயப்படுத்துவது போல பேசியிருக்கிறார். அரசியல் ஆதாயம்பெறுவதற்காகவே நான் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக அவர்கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் இந்தோனேஷியாஇ அமெரிக்காஇதென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவைஇலங்கைக்கு அனுப்பி இந்த குழுவினர் ஆய்வு நடத்தி வெளியிட்டஅறிக்கையின் அடிப்படையில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழியஅரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்ல.


இலங்கையில் உள்ள சிங்களர்களும்இ தமிழர்களும்இ இஸ்லாமியர்களும் எந்தவிதபாகுபாடுமின்றி நல்ல முறையில் வாழ்வதாகவும்இ மற்றவர்களை விட தங்கள்மக்களின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகவும் அந்த இலங்கைஅமைச்சர் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.


உச்சக்கட்ட போர் நடைபெற்ற செப்டம்பர் 2008 மற்றும் மே 2009 காலகட்டங்களில் பலமுறை துப்பாக்கிச்சூடுகள் நடத்தி அப்பாவித் தமிழர்கள்கொன்று குவித்ததாக ஐ.நா. மன்றத்தின் குழுவினர்தெரிவித்துள்ளனர்.குண்டுவீச்சு நடத்தக் கூடாது என்று விலக்குஅளிக்கப்பட்ட பகுதிகளிலும்இ மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்கியுள்ளனர்.மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகளையும் அவர்களுக்கு சேரவிடாமல் தடுத்துள்ளனர்.




தடை செய்யப்பட்ட மிக பயங்கரமானஆயுதங்களை கொண்டும்இ குண்டுமழை வீசிபல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்திருப்பதாகவும்இ நிவாரணப்பொருட்களை தடுத்ததாகவும் அந்த குழுஅறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும்கோரமான வீடியோ காட்சிகள் தற்போதுவெளியிடப்பட்டு அதில் கொடிய முறையில்தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதும்வெளிவந்திருக்கிறதே?


இலங்கையின் கடற்பகுதியில் மீன் பிடிக்கவரும் தமிழக மீனவர்களை தமிழக அரசுதடுக்க வேண்டும் என்றும் கோத்த பய ராஜபக்ச அறிவுரை வழங்கியிருக்கிறார்.கச்சத்தீவு பகுதியில் எஞ்சிய மீனவர்கள் புனித பயணம் மேற்கொள்ளலா‌ம்இஇந்திய மீனவர்கள் அந்தப் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்.கச்சத்தீவில் வலைகள் உயர்த்தலாம் என்றெல்லாம் போடப்பட்ட ஒப்பந்தத்தைமீறி செயல்படுவது இலங்கைதான்.


இந்த நிலையில் இலங்கையின் அயலுறவுச் செயலாளர் இதற்கு முற்றிலும்மாறாக நடந்து கொண்டு தமக்கு அறிவுரை வழங்குவது சாத்தான் வேதம்ஓதுவதற்கு சமமாகும்.


வட தமிழ் பகுதிகளில் மறுவாழ்வுக்கான முக்கிய பணிகள் நடைபெறுவதாகவும்அவர் கூறியிருக்கிறார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்மறுவாழ்வு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அவர் அளித்துள்ள டிவிபேட்டி மூலம் இலங்கை போர்க் குற்றம் செய்திருக்கிறது என்பதைமறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். 


இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தைசந்திக்க தயார் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். மாறாகஇலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை மறைக்கும் முயற்சியில்தான்இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிஇ அனைத்துக் கட்சி கூட்டம்இபிரதமருக்கு தந்திஇ மனித சங்கிலிஇ எம்.பி.க்கள் ராஜினாமா என்றெல்லாம்பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை நடத்தியபோது அது பற்றி வாய்திறக்காத கோத்தபய ராஜபக்ச என்னுடைய தீர்மானத்தை தாக்கி பேசுவதுஎன்பது இந்த தீர்மானம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுஎன்பதை அனைவரும் அறியலாம்.


சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கையில் நடைபெற்றதுஇனப்படுகொலைதான். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவலியுறுத்துகிறது. எனவே இந்திய அரசும்இ இலங்கை அரசை போர்க்குற்றவாளி என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையைமேற்கொள்ள வேண்டும்.


இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்கு சென்றுசிங்களர்களுக்கு இணையாக வாழும் வரையிலும் மற்ற நாடுகளோடுஇணைந்து மத்திய அரசு அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற இந்த அரசின் தீர்மானம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.எனவே இதன் மீது இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும்எடுக்காததால்தான் கோத்தபய ராஜபக்ச இது போன்ற கருத்தைதெரிவித்திருக்கிறார்.


இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும்இ சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வும் கிடைக்கும் வரை என் தலைமையிலான அரசு ஓயாது. இலங்கைதமிழர்களுக்கான நியாய உரிமையை வென்றெடுக்கும் வரை எங்களின்ராஜதந்திர நடவடிக்கை தொடரும். தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம்உள்நோக்கம் கொண்டது என்று கருத்து தெரிவித்த கோத்தபய ராஜபக்சவுக்குமத்திய அரசு இந்திய தூதர்கள் மூலம் தம்முடைய கண்டனத்தை தெரிவிக்கவேண்டு‌ம் எ‌ன்று ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தினா‌ர்..


செய்தியின் மூலம்http://tamil.webdunia.com/newsworld

3 கருத்துகள்:

சாய் பிரசாத் சொன்னது…

ஜெ ன் இந்த ஈழ ஆதரவு போக்கினை பய்னுள்ளதகா பயன் படுத்தவேண்டும்,

பெயரில்லா சொன்னது…

எமக்கு சம வாழ்வு கிட்டும் என்பது கானல் நீரே. உலக நாடுகளில் தமிழர் பால் தற்போது எற்பட்டள்ள கரிசனத்தை கருத்திற் கொண்டு தனி நாடு என்ற இலட்சியத்தை அடைய முயல வேண்டும். இனியாவது உலக நாடுகள் சிங்கள இனவெறியரை புரிந்து கொண்டு பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத்தர முன் வர வேண்டும். எம் துயரங்களுக்க மதிப்பளித்து எமக்காய் குரல் தரும் தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே