திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கிறீஸ் பூதங்கள்(கிறீஸ் யக்கா) வருகின்றன! எச்சரிக்கை!இப்போது இலங்கையில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி எது வென்றால் கிறீஸ் மனிதன் அல்லது கிறீஸ் பூதம் பற்றியதாகும்
இந்த மர்ம மனிதன் அல்லது பூதம் வீடு புகுந்து அல்லது வீதிகளில் தனித்துவரும் இளம் பெண்களை தாக்குவதாகவும் தினமும் பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தச் செய்திகளை வதந்தி என்றும் சொல்லமுடியாது. மலையகத்திலும் தென் தமிழீழப் பகுதிகளிலும் இவ்வாறன மர்மமனிதனால் அல்லது மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகைய மர்ம மனிதனை அல்லது மர்ம மனிதர்களை பார்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.இந்த மர்ம மனிதன் என்ற சந்தேகத்தில் பல அப்பாவிகள் அடிவாங்கியுமிருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த மர்ம மனிதர்கள் யார் ? இவர்களின் பின்னணி என்ன? என்று ஆராய்;ந்தால்
மகிந்தவுக்குரிய தோசத்தை நீக்குவதற்கு ஆயிரக்கணக்கான பெண்களின் இரத்தம் தேவை  படுவதாகவும் அதற்காகவே இந்த மர்ம மனிதர்களை களம் இறக்கி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
நாட்டிலிருந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு பலதரப்பிலிருந்தும் நெருக்கடி வருவதாகவும்?அதை முடியடிப்பதற்கு நாட்டில் இன்னும் பதட்ட நிலை இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த மர்ம மனிதர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னொரு சாரார் வன்னி மற்றும் வாகரை யுத்தங்கள் இடம்பெற்ற காலத்தில் தமிழ் பெண்கள் மீது அனைத்து விதமான அத்துமீறல்களையும் செய்யும்படி படையினருக்கு அனுமதி; கொடுக்கப்பட்டதாகவும்,தற்போது போர் ஓய்ந்த சூழ்நிலையில் படையினரை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பதில் படைத்தலைமை நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இதை தவிர்ப்பதற்கு இவ்வாறு முகமூடி அணிந்து மர்ம மனிதர்கள் என்ற பெயரில் அத்துமீறல்களை செய்வதற்கு படையினருக்கு மறைமுக அனுமதியை படைத்தலைமை வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இவற்றில் எது உண்மை எது பொய் என்பதற்கு அப்பால் அனைத்து சம்பவங்களையும் வைத்துப் பார்க்கும் போது இந்த மர்மனிதர்களின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்தரப்பே இருக்கிறது என்ற உண்மை புலனாகிறது. தென் தமிழீழத்தில் மக்கள் இந்த மர்ம மனிதர்களை துரத்திச் சென்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவர்கள் படைமுகாங்களுக்குள் ஓடித்தப்பிச் சென்றுள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால் இந்த மர்ம மனிதர்கள் தென் தமிழீழ பகுதிகளையும் மலையகத்தையும் மட்டும் அதிகமாக குறிவைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது
வடக்கில் வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவரவில்லை
இது தொடர்பாக கொழும்பிலுள்ள சில ஊடக நண்பர்களை வினவிய போது கிடைத்த தகவல்கள் வித்தியாசமானவையாக இருந்தன.
சிறீலங்கா அரசாங்கம் சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டுவதை தடுத்து அதை இந்தியாவின் பக்கம் இழுப்பதற்காக இந்திய உளவுத்துiறான றோ 1984 பாணியில் தங்களுடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் ஆயுதக்குழுக்களில் பலரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துவருவதாகவும். இவர்கள் மூலம் சிறலங்காவின் பெருளாதார இலக்குகளை தாக்க திட்டமிட்டுவருவதாகவும் இவர்களை மலையகப் பகுதிகளிலும் கிழக்கிலும் களமிறக்கவே றோ திட்டமிட்டிருப்பதாகவும் சிறீலங்கா படைத்துறை தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதை முறியடிப்பதற்கு கிழக்கிலும் மலையகப்பகுதிகளிலும் அந்நியர்கள் கிராமங்களுக்கு ஊடுருவுதை தடுப்பதற்கு மக்களை எச்சரிப்பதற்காகவே இத்தகைய மர்மமனிதர்கள் அல்லது கிறிஸ் பூதங்கள் களமறிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
இனிவருங்காலங்களில் புதியவர்கள் எவரும் இலங்கையின் எந்தபாகல் நடமாடினாலும் அவர்களை மக்கள் சந்தேகப்படும் நிலையை அரசாங்கம் தோற்றுவித்து என்றும் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியாது. ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதை போல மர்ம மனிதர்கள் அல்லது கிறீஸ் பூதங்கள் அரசபடைகளை சேர்ந்தவர்களே என்பது மக்களுக்கத் தெரிந்துவிட்டது.
அதிலும் தென்தமிழீழத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு அரசபடைகள் அவர்களின் நண்பர்கள் அவர்களின் காவலர்கள் என்ற நிலைப்பாடு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கட்டமைக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த நண்பர்களின் முகாங்களுக்கு தீவைத்து கொழுத்தம் நிலையை இந்த மர்ம மனிதர்கள் உண்டாக்கிவிட்டார்கள்.இதுவும் இந்த விடயத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய  ஒரு முக்கிய திருப்பமாகும்

கருத்துகள் இல்லை: