வியாழன், 4 ஆகஸ்ட், 2011

எகிறிச் செல்லும் தங்கவிலை சரிவை நோக்கி பங்குச்சந்தைகள்யூரோ வலயத்தின் கடன் நெருக்கடிப் பரம்பல் குறித்த அச்சம் உக்கிரமடைந்துள்ளதும் அமெரிக்க பொருளாதாரத்தில் தொடரும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மையும் உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தையில் பாரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கின் டோவ் ஜோன்ஸ் சுட்டி மூன்று சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பிராங்க்போர்ட்டின் டாக்ஸ் சுட்டி மற்றும் லண்டனின் எஃப்ரீஎஸ் ஈ சுட்டி ஆகியன ஏறத்தாழ மூன்று தசம் ஐந்து சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
பிரான்சின் காக் 40 (ஊயுஊ 40) சுட்டி 3.9 சதவீதத்தால் குறைந்துள்ளது
யூரோ வலயக் கடன் நெருக்கடி பரவலடைந்து வருவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தது உலக பங்குச் சந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை கடன் உச்ச வரம்பை உயர்த்துவது மற்றும் நிதிப் பற்றாக்குறையை குறைப்பது தொடர்பான சட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கடந்த 2ம் திகதி  கையொப்பமிட்ட போதிலும் அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற உணர்வு முதலீட்டாளர்களிடம் உள்ளதால் நியூயார்க் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது.
இந்தப் பங்குச் சந்தை வீழ்ச்சியை அடுத்து ஒரு அவுண்ஸ் அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை 1677 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 2263ரூபா. ஆகவும், 24 தங்கத்தின் விலை 24205ரூபா. ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை18104 ரூபாவாகவும் இருந்தது

கருத்துகள் இல்லை: