திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சிறீலங்கா அரசின் இயலாமைசிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள மேற்கு நாடுகள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க முயன்றால், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், ,தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்கிய நாடுகள், அமைப்புகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், மற்றும் அமைப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களை போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் பதுங்குக்குழியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து 300 மில்லியன் ரூபா பெறுமதியான, தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாகவும் திவயின நாளிதழ் தெரிவித்துள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துவது பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வர மூன்று மேற்கு நாடுகள் திட்டமிட்டுள்ளதாகவும் திவயின நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
திவயின நாழிதழின் இந்தச் செய்தி சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு எழுதப்பட்ட என்றாலும் இந்தச் செய்திக் கூடாக சிறீலங்கா அரசின் இயலாமை வெளிபட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகள் ஒருபயங்கரவாத இயக்கம். அந்தப் பயங்கரவாத இயக்கத்தக்கு மேற்குலக நாடுகள் சில ஆயுதங்களை கொடுத்திருக்கின்றன என்ற காரணத்தை முன்வைத்து தான் செய்த மாநிடத்துக்கு எதிரான படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவதை சிங்கள மக்களும் சீனா ரஷ்யா போன்ற நாடுகளும் நம்பக் கூடும். ஆனால் மாநிடத்துக்கு எதிரான படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கான சர்வதேச சட்டம் அதை ஏற்றுக் கொள்ளுமா? என்ற ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
சிறீலங்கா அரசு சொல்வது போல அல்லது சிங்கள மக்களை நம்ப வைப்பது போல மேற்குலக நாடுகள் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தன என்பது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால்
பல மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த போதிலும் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடவில்லை ? தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்று எவரும் சொல்லவில்லை?
2002 அமைதி ஒப்பந்தக் காலத்தில் இருந்து விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாக ஏற்றக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்ததும்படியே மேற்குலகு சிறீலங்காவுக்கு கூறியதும் அதை ஏற்றுக் கொண்டு தாய்லாந்தில் இருந்து ஜெனீவா வரையில் சிறிலங்கா அரசாங்கம் அவர்களுடன் பேசியதும் வரலாற்றில் பதியப்பட்ட சட்டபூர்வமான பதிவுகளாகும்
அடுத்தபடியாக விடுதலைப்புலிகள் மேற்குலகில் இருந்து கொண்டு சென்ற ஆயுதங்கள் மூலம் ஒரு இனம் என்ற அடிப்படையில் அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்கி அழிக்கவில்லை.விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்குகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ அரசியல் பொருளாதார இலக்குகளாகவே இருந்தன.
விடுதலைப் புலிகள் தாக்கினார்கள் விடுதலைப்புலிகள் ஆயுதம் வைத்திருந்தார்கள்  என்பதால் மட்டும் தமிழ் மக்களுக்கு எதிரான தங்களது போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை நியாப்படுத்திவிட முடியாது என்பதையும் அதற்கான தண்டனைகளில் இருந்து தப்பிவிட முடியாத என்பதையும் சிறீலங்கா அரசு உணரும் காலம் வராமல் போய்விடாது

கருத்துகள் இல்லை: