செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

லண்டனில் என்ன நடக்கிறது? LAST UPDATE


லண்டனில் என்ன நடக்கிறது?
ஏன் லண்டன் மாநகரிலுள்ள பல்வேறு நகரங்களில் கலவரங்களும் வன்முறைகளும் நடக்கின்றது?
லண்டனின் முன்னைநாள் நகரபிதா கென் லிவிங்ஸ்டோன் உள்ளடங்கலான பலர், பலவீனமான பொருளாதாரம், அதி உயர்ந்த வீதத்திலான தொழில்வாய்ப்பின்மை, ஆட்சியில் இருக்கும் டேவிட் கமரூன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வரலாறு காணாத நிதிவெட்டுக்கள் எப்பவற்றால்  பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டிருக்கும் இளைய சந்ததியின் கோபமே இவ்வாறு வன்முறையாக வெடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள், அனுமதிக்க முடியாத, அப்பட்டமான குற்றச்செயல்கள் என்று பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரேசா மே தெரிவித்துள்ளார் , இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர்களது செயல்களுக்கான விளைவுகளை அனுபவிப்பார்கள் என்றும் ஆணித்தரமாகத் கூறியுள்ளார்.
பிரித்தானிய தலைமையமைச்சர் டேவிட் கமரூனும் இதே கருத்தையே பிரதிபலித்திருக்கிறார். சுடத்துக்கு கட்டபட்டு நடக்கும் மக்களை பாதுகாக்க தனது அரசாங்கம் அனைத்த நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதியளித்தள்ளார்
கடந்த வியாழக்கிழமை கறுப்பினமக்கள் அதிகமாக வாழும் டொட்டன்ஹாம் பகுதில் இடம்பெற்ற மோதல் சம்பவம்ஒன்றை  அடக்க காவல்தறையினர் மேற்கொண்ட. துப்பாக்கி பிரயோகத்தில்  மார்க் டுக்கான் என்ற 29 வயது ஆபிரிக்க இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான இவர்  இந்த மோதலில் சம்பந்தப்படாத அப்பாவி எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் துப்பிரயோகத்தை கண்டித்து கடந்த சனிக்கிழமை 300 பேர் வரை அமைதி ஊர்வலம் சென்ற போது அதையும் காவல்துறையினர் தடுத்ததையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது.டொட்டன்ஹாம்நகரத்தில் இருந்த கட்டிடங்கள் கடைகள் பல்பொருள் அங்காடிகள் எல்லா அடித்து நொருக்கி சூறையாடப்பட்டபின் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதை அடுத்து ஞாயிற்றக்கிழமை இந்தக் கலவரம் கிழக்கு லண்டன் நகரப் பகுதிகள் உட்பட பல பகுதிகளுக்கு பரவியது

நேற்று திங்கட்கிழமை; மூன்றாவது நாளாக லண்டனின் பல பாகங்களில் கலவரங்கள் தீவிரமாகப் பரவியிருந்தன. இதேவேளை ஏனைய இங்கிலாந்து நகரங்கள் சிலவற்றிலும் பதற்றநிலை தொற்றியிருந்தது.
லண்டனின் பல பாகங்களிலும் கடைகள் கொள்ளையிடப்பட்டு கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் மேலதிகமாக 1700 காவல்துறை உறுப்பினர்கள் தலைநகருக்குள் தருவிக்கப்பட்டுள்ளனர். லண்டனில் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஹக்னி, க்ரோய்டன், லூய்ஸ்ஹாம், கப்ஹாம், க்ளப்ஹாம் ஆகிய இடங்கள் அடங்குகின்றன.
லண்டனுக்கு வெளியே பேர்மிங்ஹாம், லிவர்பூல், நொட்டிங்ஹாம் ஆகிய இடங்களிலும் வன்முறை பரவியுள்ளது. இத்தாலியில் தனது குடும்பத்தவரோடு விடுமுறையைக் களித்துக் கொண்டிருந்த தலைமை அமைச்சர் டேவிட் கமெரோன் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை ஆராயும் அவசரகால கோப்ரா சந்திப்பு, கமெரோன் தலைமையில் இன்று காலை ஒன்பது மணியளவில் நடந்தது. தற்போது தோன்றியிருக்கும் கலவர நிலையை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது
இது வரை கடை உடைப்பு சூறையாடல் தீவைப்பு சம்பங்கள் முதலான ஒரேவகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டது  தொடர்பாக ; குறைந்தது 400 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 69 பேர் மீது பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. வடமேற்கு லண்டனின் வெம்ப்ளி பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்றைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி ஒருவரை அவரது வாகனத்தில் வைத்துக் கொலை செய்ய முயன்றதான சந்தேகத்தின் பேரில் மூவர் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
லண்டன் ஓர் அதிர்ச்சிகரமானதும் மோசமானதுமான காலைப்பொழுதுக்கு முகம் கொடுத்துள்ள''தாக உதவி காவல்துறை ஆணையாளர்  ; தெரிவித்துள்ளார். இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது உள்ளடங்கலான அனைத்து சாத்தியங்களும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அடுத்த 24 மணிநேரங்களில் 13000 காவல்துறை உறுப்பினர்கள் லண்டனில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஸ்கொட்லாண்ட் யார்ட் ட்வீட்டரில் அறிவித்துள்ளது.
ஈலிங் நகரசபை உட்பட பல நகரசபைகள் வர்த்தக நிலையங்கள் நேரத்தடனேயே மூடிவிடும்படியும் மக்களை வீடுகளிலேயே இருக்கும் படியும் அறிவுறத்தியுள்ளன.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி கலைவரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் பிரித்தானிய மக்களுக்கு உறுதியளித்துள்ள தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாதென்றும் அவர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்

கருத்துகள் இல்லை: