வியாழன், 4 ஆகஸ்ட், 2011

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! வாழ்க நீயும் இலவசங்களால்!தமிழத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்றைக்கு சட்டசபையிலே சமர்ப்பிக்கப்பட்ட போது அந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழகத்தையும் தமிழக மக்களுடைய வாழ்நிலையும் மேம்;படுத்துவதற்கான திட்டங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை கவனிப்பதை விட என்னென்ன இலவசத் திட்டங்கள் முன் மொழியப்பட்டிருக்கின்றன என்பதை அவதானிப்பதிலே தான் பலரும் அக்கறை கொண்டிருந்தார்கள்.
அந்தளவுக்கு தமிழக அரசியலில்  இலவசங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக பழக்கப்படுத்தப்பட்டு விட்டது.
சமச்சீர் வளர்ச்சியற்ற ஒரு சமுகத்தில் வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கு இத்தகைய இலவசத்திட்டங்களும் மானியங்களும் அவசியம் என்ற ஒரு கருத்தை தங்கள் வசதிகேற்றபடி அரசியல்வாதிகள் சொல்லிவருகிறார்கள்.
ஆனால் இந்த சமச் சீரற்ற வளாச்சி ஏன் இருக்கிறது? அது ஏன் தொடர்கிறது? என்பதை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான செயற்திட்டங்களை வகுப்பதில் அவர்கள்  அக்கறை கொள்வதில்லை.
இந்த அரசியல்வாதிகள் அரசியலில் எதைக் கற்றிருக்கிறார்களோ? இல்லையோ? ஏற்றத்தாழ்வான சமுக அமைப்பும் சமச்சிரற்ற வளர்ச்சிப் போக்கும் வாக்குச் சீட்டு அரசிலுக்கு முக்கியமானவை என்பதையும் மக்களை இலவசங்களுக்காக கையேந்தி நிற்கும் விழிப்புணர்வற்ற கூட்டமாக தொடந்து வைத்திருப்பதன் மூலம் தான் தங்களது சுரண்டல் அரசியலை தொடரமுடியும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
தமிழக அரசின் இன்றைய வரவு செலவுத்திட்டத்தில்  பரிதுரைக்கப்பட்ட முக்கியமான இலவசத்திட்டங்களில்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க  4.6 கோடி ரூபா ஒதுக்கீடு
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு.ஆயிரத்து 500ரூபாவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  2 ஆயிரம் ரூபாவும் ஊக்கத்தொகை வளங்குவதற்கான ஒதுக்கீPடு
மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி வழங்குவதற்கு   912 கோடிரூபா ஒதுக்கீPடு.
இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு  135 கோடி ரூபா ஒதுக்கீடு என்பவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.
இங்கே வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளிலே கூட வருவாய் குறைந்த அடித்தட்டு மக்களுக்கான சமூக உதவிக் கொடுப்பனவுகள்  வழங்கப்படும் ; போது தமிழக அரசின் இத்தகைய இலவசத்திட்டங்களை வரட்டுத்தனமாக விமர்சிக்க முடியாது.
ஆனால் இலவசம் என்பது தமிழகத்தின் ஒரு அரசியல் கலாச்சாரமாக ஆக்கப்பட்டிருப்பதும் மக்கள்; ஆட்சிக்கு வரவிருக்கும் அரசியல் கட்சி எத்தகைய கொள்கைத் திட்டங்;களை வளர்ச்சித் திட்டங்களை வைத்திருக்கிறது என்று பார்ப்பதை விட எத்தகைய இலவசத்திட்டங்களை முன்வைத்திருக்கிறது என்று பார்க்கும் நிலையை உருவாக்கியிருப்பதும் கடுமையான விமர்சனத்தக்குரிவை.
கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவசத் தொலைக்காட்சி திட்டத்தை விட அதிமுக ஆட்சி முன்மொழிந்துள்ள இலவச ஆடு மாடு வளங்கும் திட்டமும் ஏழை மாணவர்களுக்கான இலவச மடிக் கணனி திட்மும் வரவேற்கத் தக்கவை. ஒழுங்கான முறையில் செயல்படுத்தப்படால் இவை ஏதிலிகளாக உள்ள அடித்தட்டு மக்களின் பொருளாதார இருப்பை மேப்படுத்தும்.
குட்டிபோடாத தெலைக்காட்சியை விட குட்டியும் கன்றும் போட்டு பல்கிப் பெரும் ஆடு மாடுகள் ஏழை மக்களுக்கு அவசிமானவை. ஆனால் நிலத்தையே போலி ஆவணங்களை தயாரித்து சுறுட்டிக் கொள்ளும் தமிழகச் சூழலில் இந்த ஏழை மக்கள் இந்த ஆடுமாடுகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் எப்படி பராமரிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்தே இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கிறது

-சிவா சின்னப்பொடி

கருத்துகள் இல்லை: