திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சிபிஎம்மின் வரவேற்கத்தக்க மாற்றம்இலங்கையின்  வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்iயில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உருப்படியான நகர்வையும் மேற்கொள்ளவில்லை என்று இந்தக் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது இன்றைய செய்தி;. இந்தச் செய்தியின் முக்கியத்துவம் என்னவென்றால் இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழுவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது.பொதுவான அரசியல் கட்சின் ஒரு தீர்மானத்தை நிறைவேறுவதற்கும் ஒரு கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவெற்றப்படுவதற்கும் தலை கீழ் வேறுபாடு உள்ளது.
தலைவர்களின் செல்வாக்கின் கீழ் வழி நடத்தப்படுகின்ற பொதுவான அரசியல்கட்சிகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் அந்த தலைவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கருத்திலும் செயலிலும் மாறிக்ககொள்ளும் தன்மை கொண்டவை.
ஆனால் தனிநபர் தான் அங்கம் வகிக்கும் அரசியல் சபை அல்லது கொமிட்டிக்கு கட்டப்படுவது கீழ் மட்ட அரசியல் சபைகள் அல்லது கொமிட்டிகள் மேல் சபைக்கு அல்லது மேல் மட்ட கொமிட்டிக்கு கட்டப்படுவது.சிறுபான்பை பெருப்பான்மைக்கு கட்டப்படுவது என்ற ஜனநாயக மத்தியஸ்த்துவ கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் கொம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய குழுவில் நிறை வேற்றப் படும் தீர்மானங்கள் தனி நபர்களால் திரிக்கப்படவோ மாற்றப்படவோ முடியாதவை.அந்த வகை சிபிஎம் எனப்படும் இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு எடுத்த தீர்மானம் முக்கியத்தவம் வாய்ந்த ஒன்றாகவே பாக்கப்பட வேண்டும்.
அதிலும் இந்தியாவில் உள்ள பொதுவுடமை கட்சிகள் மற்றும் அமைப்புக்களில் நாடாளுமன்றப் பாதையை நிராகரித்த நக்சலைட்டுகள் எனப்படும் மார்ச்சிச லெனினிசக் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஈழத்தமிழ் மக்களுக்கு பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டவை. நாடாளுமன்றப் பாதையை ஏற்றுக் கொண்ட சிபிஐ எனப்படும் இந்தியக் கொம்யூனிஸட் கட்சி  மற்றும் சிபிஎம் எனப்படும் இந்தியக் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸட் கட்சி என்பவற்றில் சிபிஐ எற்கனவே அதை ஏற்றுக்கொண்ட அதற்காக குரல் கொடுத்து வந்ததுடன் பல போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.
ஆனால் சிபிஎம் இந்த விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறது.கேரளவிலும் மேற்கு வங்கத்திலும் அது நீண்ட காலம் ஆட்சியில்; இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்திய வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகார மையத்;தில் செல்வாக்கு செலுத்தும்,இந்த இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள்  தங்களது தமிழன விரோத மற்றும் ஈழவிரோத கருத்தியலை இந்தக் கட்சியிலும் மறைமுகமாக செலுத்தியதே இதற்கு காரணம் என்றும் ஒரு குறற்ச்சாட்டுள்ளது.
எது எப்படியோ ஈழதமிழ் சுயாட்சி அதிகாரம் பெற தகுதியுள்ளவர்கள் என்று தங்களது மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு நிலைமை மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் செல்வாக்குச் செலுத்தும் கேரளா மேற்குவங்கம் உட்பட இந்தியா முழுவதிலும் அதற்கு அப்பால் சீனாவிலும் ரஷ்யாவிலும் அவர்களது தோழமைக் கட்சியான கொழும்யூனிஸ்ட் கட்சி மட்த்திலும் இதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களது விடிவுக்கு போராடும் தமிழ் மக்களின் விருப்பமாகும்

கருத்துகள் இல்லை: