வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பேச்சுவார்த்தை நாடகமும் ஈழத்தமிழர்களின் கடமையும்


சிறீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு விக்கிரமாதித்தன் வேதாளம் கதையில் சொல்வதைப் போல மறுபடியும் இன்று நடந்திருக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறப் போகின்ற நேரத்திலே
இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகத்தினருக்கு இறுதியான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு இந்திய இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது
இலங்கையின் தற்போதைய நிலை என்ற தலைப்பில் இந்திய மக்களவையில் இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்பித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு சாதாரணமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றை வழங்குமாறும் இலங்கைவாழ் தமிழர்களுக்கு அது உடனடித் தேவையாக உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதை வரவேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு இந்தியா உதவி புரியும் எனவும் கூறியுள்ளார்.
சிறீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்ற சந்தேகமும் கூட்டமைப்பு தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு விலை போய்விட்டனர் என்ற கோபமும் பலருக்கு இருக்கிறது.
இது உண்மையா பொய்யா என்று ஆராய்வதற்கு அப்பால் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களான எம்மை சார்ந்து இரண்டு சம்பவங்கள் உலகில் நடக்கின்றன
ஒன்று சிறீலங்கா அரசின் மீதான போர் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள்.
மற்றது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது என்ற நாடகம்.
இந்த இரண்டையும் நாங்கள் எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதில் தான் எமது வெற்றி தங்கி இருக்கிறது.
உலக அளவில் அதிகரித்துவரும் போர் குற்ற விசாரணை தொடர்பான அழுத்தத்தை திசை திருப்பவதற்கு அல்லது மழுங்கடிப்பதற்கு  மகிந்தருக்கு அரசியல் தீர்வு என்ற நாடகம் தேவைப்படுகிறது.வன்னி வாகரை யுத்தங்களில் இடம்பெற்ற மாநிடத்துக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் தங்களது மறைகரம் இருந்தது என்பதை மகிந்தர் சர்வதேசத்த்திற்கு வெளிபடுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்தியாவின் ஆளும் கொங்கிரஸ் கட்சி அரசு அவரை என்ன விலை கொடுத்தும் காப்பாற்ற நினைக்கிறது.இதனால் உள்ளுரில்; தனக்கு ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்க சீனா காலூன்றிவிடும் சீன அச்சுறுத்தல் என்ற கதையாடல்களை செய்துகொண்டிருக்கிறது.
இந்த நாடகத்திலே பங்குபற்ற கூட்டமைப்பு பங்குபற்ற விரம்பாது விட்டால் அவர்கள் தங்களுக்கு சார்பான ஈபிடிபி ஈஎன்டிஎல்எப் போன்ற அபை;புக்களை வைத்து இந்த நாடகத்தை நடத்தத்தான் போகிறார்கள்.அப்படி ஒரு நிலை வருமானால் விடுதலைப்புலிகளுக்கு அமைதி வழியில் பிரசனைக்க திர்வுகாண தடையாக இருக்கிறார்கள் என்று அறிவித்து மகிந்தர் பிரச்சனையை தீர்க்கக் தயாராக இருக்கிறார். ஆனால் தமிழர் தரப்பு அதற்கு தயாராக இல்லை என்று பிரகடனப்படுத்த இந்தியா பின்நிற்காது.
உண்மையில் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற தமிழர்களின் அடிப்படை கோரிக்கைளில் அதாவது  வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தமிழர் தாயகம் ,மற்றும் தமிழர்கள் ஒரு தனித்தவமான தேசிய இனத்தவாகள்  அவர்களுக்கு சுயநிhணய உரிமை உள்ளது என்பதை இது இவை சம்பந்தப்பட்ட சிறு உரிமைகளைக் கூட மகிந்தரால் வழங்க முடியாது.இன்றைக்கு அவர் சொல்லிக் கொண்டிருக்கிற ஒற்றையாட்சி முறைக்குள்ளான அதிகாரப் பகிர்வு என்பதை அவரால் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் முள்ளவாய்க்கால் வெற்றியின் பின் அவர் உருவேற்றிவிட்ட சிங்கள பௌத்த பேரின வாத பூதத்தை இனி அவர் நினைத்தாலும் அடக்கமுடியாது என்பதே இன்றைய யாதர்த்தமாகும்.
மகாபாரத்தில் கௌரவர்களிடம் இருந்து ஒரு நாடல்ல ஒரு நகரமல்ல ஒரு வீடல்ல ஒரு பிடி மண்ணைக்கூட பெற முடியாத நிலை பாண்டவர்களுக்கு இருந்தது என்று புராணம் சொல்வதைப் போல சிறீலங்கா அரசிடமிருந்தும் தமிழர்கள் எதிவித அரசியல் உரிகளையும் பெற்று விட முடியாது என்பதை மீண்டும் ஒரு தடவை நாம் உலகுக்கு நிரூபிப்பதன் மூலம் தான் போர் குற்ற விசாரணகளுக்கு வலுச் சேர்த்து அதற்கு அப்பால் ஈழத்தில் சிறீலங்கா அரசு நடத்தியது போர் குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பே என்பதை இந்த உலக சட்ட ஒழுங்கில் தமிழர் தரப்பு நிலை நிறுத்தி தனக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும்
siva sinnapodi

கருத்துகள் இல்லை: