ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

பிரான்சை வெப்ப அலை தாக்கியது : 33 மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை!


பாரிசில் வெப்ப அலை காரணமாக காற்று மாசடைந்துள்ளது
2003 ம் அண்டு பிரான்சை தாக்கிய வெப்ப அலையில்(canicule)14800 பேர் உயிரிந்த சம்பவத்தை பிரெஞ்சு மக்கள் இன்னமும் மறக்காத நிலையில் தற்போது அதையொத்த வெப்ப அலை பிரான்சை தாக்கியுள்ளது.
பிரான்சின் 33 மாவட்டங்களில் ஒரேஞ்சு நிற அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதிலும் 21 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மிக அதிகரித்து 40°பாகை செல்சியசுக்கு மேல் செல்லும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிசிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று இந்த வெப்ப அலை காரணமாக காற்றுமாசடடைந்து(pollution)காணப்படும் என்றும் இதனால் உடலில் தாங்க முடியாத சூடும் சுவாச நோய்களும் இதய நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளதென்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாரிசிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ள பல மருத்துமனைகளில் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிறைய தண்ணீர் அருந்தும் படியும் அடிக்கடி முகம் கைகால்களை நீரில் கழுவும்படியும் மக்களுக்கு அறிவித்தல் விடப்பட்டுள்ளது.இரவு 9 மணி வரை அவசிய தேவைகளுக்கு அல்லாமல் மக்களை குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் நோயாளிகளை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வீடுகளில் உள்ளவர்களும் சட்டர்களை மூடிவிட்டு ஜன்னல் கண்ணாடிகளை திறந்து விடுமாறும் சிறவர்கள் முதியவர்களுக்கு நிறைய தண்ணீரும் முலாம் பழம் போன்ற சூட்டை தணிக்கும் பழங்களும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பிரான்சிலுள்ள(ஐரோப்பாமுழுவதிலும் கூட) வீடுகள் குளிர் தடுப்பு தொழில்நுட்ப அடிப்படையில் அதற்கான மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்டிருப்பதால் இவ்வாறான எதிர்பாராத வெப்ப அலைகளை வீசும் காலத்தில் மக்களுக்கு அதிக சிரமங்கள் எற்படுவதாக கட்டிட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்களின் உறவினர்கள் நண்பர்கள் யாராவது தனிமையில் வாழ்ந்தால் அவர்களுடன் தொலைபேசிலாவது தொடர்புகொண்டு அவர்களது உடல் நலத்தை உறதிப்படுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கம் கேட்டுள்ளது.
2003ம் ஆண்டு வெப்ப அலை வீசியபோது தலைமையில் வாழ்ந்த பல ஆயிரக்கணக்கானோர் அதிக வெப்பம் காரணமாக உடலில்நீர் வற்றிய நிலையில் உதவிக்கு ஆளின்றி உயிரிழந்திருந்ததால் இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வேண்டுகோள் விடப்பட்டுள்ளது
http://www.bfmtv.com/canicule-21-departements-en-alerte-orange-actu32025.html
http://www.bfmtv.com/a-paris-la-vague-de-chaleur-renforce-les-actu32061.html

கருத்துகள் இல்லை: