சனி, 18 ஆகஸ்ட், 2012

பிரான்சை அனல் காற்று தாக்கும் அபாயம்பிரான்சை இந்த வாரம் அனல் காற்று (canicule) தாக்கும் அபாயம் உள்ளதாக மெத்தியோ பிரான்ஸ் எசச்ரித்துள்ளது.வடஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை கடந்து செல்லும் வெப்பஅலை காரணமாக பிரான்சில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்துக்காணப்படும் என்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 40°செல்சியசை தாண்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புhரிசையும் அதன் புறநகர் பகுதிகளையும் கூட இந்த அனல் காற்று தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வயோதிபர்களை நோயாளிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான அமைச்சர் மிஷேல் துலுனே கேட்டுக்கொண்டுள்ளார் மக்கள் இந்த வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்கச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பகலில் வீட்டின் யன்னல்களின் சட்டர்கள் எனப்படும் வெளி கதவுகளை  முடிவிட்டு உள் கணணாடிக் கதவுகளை   திறந்துவிட வேண்டும் என்றும்  இரவு நேரங்களில் இரண்டையும் திறந்து விடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
அடிக்கடி தண்ணீர் அருந்திக் கொள்ளவதுடன்  உடலையும் அடிக்கடி நனைத்துக் கொள்ளல் வேண்டும் என்றும்  முக்கியமாக முகத்தையும் கைகளையும் அடிக்கடி கழுவிக் கொண்ணல் வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை முதியவர்கள் வெளியே செல்வதை  முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும்  அத்தோடு முதியவர்களையும் தனியே இருப்பவர்களையும் அவர்களது உறவுகள் அடிக்கடி தொடர்பு கொண்டு நலன் விசாரிப்பதோடு அவர்களுக்கு  தேவையான  உதவிகளையும் செய்யுமாறு அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.
அனல் காற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அவசர முதலுதவிகளை வழங்குவதற்கு நாடு முழுவதிலும் முதலுதவிப் படையினரும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மாநகர சபைகள் மக்கள் முகம் கைகால்களை நனைத்துக் கொள்வதற்கான அவசர நீர் வழங்கிகளை நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவியுள்ளன.
2003 ஆம் ஆண்டு பிரான்சை தாக்கிய  வெப்ப அலை (canicule)யால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முதியவர்கள் குறிப்பாக தனிமையில் இருந்த முதியவர்களும்  நோயாளிகளும் ;உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மரணமடைந்தனர். இம்முறை  அதை விட மோசமான வெப்ப அலை  வர உள்ளதால் பிரான்ஸ் அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்சை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: